ஹரி ராயா பொருநாளின் விடுமுறைக்குப் பிறகு, பள்ளி அமர்வுகள் இன்று மீண்டும் திறக்கப்பட்ட வேளையில், இன்னும் அதிகமான மாணவர்கள் முகக் கவசம் அணியாதது வருத்தத்தை அளிப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று காலை, ஜொகூர், மாசாய், தாமான் மோலேக்கில் உள்ள பள்ளிப் பகுதியில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், பெரும்பாலான மாணவர்கள் முகக் கவசம் அணியாதது கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் 19 நோய்த்தொற்று மீண்டும் எழும் என்ற அச்சத்தின் காரணமாக, முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படாது என்றாலும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு முகக்கவசம் அணிவது அவசியமாகும் என்று கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி, கல்வி அமைச்சு பரிந்துரைச்செய்தது.
அதே வேளையில், மாணவர்களின் புறப்பாட நடவடிக்கை போன்ற கூட்ட நெரிசலின் போது, முகக்கவசம் அணிவது அவர்களுக்குப் பாதுகாப்பானது என்பதனால், அதனை அணியுமாறு ஊக்குவிக்கப்படுவர் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சலேஹா முஸ்தபா தெரிவித்தார்.

Related News

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு


