Jun 6, 2026
Thisaigal NewsYouTube
'ஒரு விரல் புரட்சி' வரலாறு படைக்கும் தருவாயில் உள்ளது - முதலமைச்சர் விஜய்க்கு அன்வார் வாழ்த்து
தற்போதைய செய்திகள்

'ஒரு விரல் புரட்சி' வரலாறு படைக்கும் தருவாயில் உள்ளது - முதலமைச்சர் விஜய்க்கு அன்வார் வாழ்த்து

Share:

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய்க்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான பல தலைமுறைகள் தாண்டிய உறவை விஜய்யுடன் இணைந்து மேன்மேலும் சிறப்பாக தொடர விரும்புவதாகவும் அன்வார் தமது சமூக ஊடகப் பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல ஆண்டுகளாக, ஊழல் அரசியல்வாதிகளையும் பல்வேறு வில்லன்களையும் மூன்று மணி நேரத்திற்குள் வீழ்த்தும் விஜயை அவரது ரசிகர்கள் திரையில் ரசித்து வந்ததாக தெரிவித்துள்ள அன்வார், தற்போது தமிழ்நாட்டு மக்கள் அவரிடம் ஒப்படைத்திருப்பது திரை உலகக் கதாபாத்திரங்களை விட மிகப் பெரிய பொறுப்பாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,“ஒரு விரல் புரட்சி” தற்போது வரலாறு படைக்கும் தருவாயில் உள்ளதாகவும் அன்வார் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மலேசியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பல தலைமுறைகளாக ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் மக்கள் தொடர்புகள் இருந்து வரும் நிலையில், எதிர்வரும் ஆண்டுகளில் முதலமைச்சர் விஜயுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருப்பதாகவும் அன்வார் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கலைப்புக்கு ஒப்புதல் இல்லை: டான் ஸ்ரீ ராய்ஸ் யாதிம் அதிரடி வாதம்

நெகிரி செம்பிலான் சட்டமன்றக் கலைப்புக்கு ஒப்புதல் இல்லை: டான் ஸ்ரீ ராய்ஸ் யாதிம் அதிரடி வாதம்