Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பேரா மாநில அரசாங்க நிலத்தில் புதிய கோவில்கள் கட்டுவதற்கு இனி அனுமதியில்லை: ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேரா மாநில அரசாங்க நிலத்தில் புதிய கோவில்கள் கட்டுவதற்கு இனி அனுமதியில்லை: ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் அறிவிப்பு

ஈப்போ, ஜூன்.05-

பேரா மாநிலத்தில் அரசாங்க நிலத்தில் புதிய கோவில்கள் கட்டுப்படுவதற்கு அனுமதி கேட்டு, விண்ணப்பிக்கப்படும் எந்தவொரு விண்ணப்பமும் அங்கீகரிக்கப்படாது என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் A. சிவநேசன் அறிவித்துள்ளார்.

வரக்கூடிய அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்தகைய அனுமதி வழங்கப்படாது என்பதில் பேரா மாநில அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பேரா மாநில சுகாதார, ஒற்றுமை மற்றும் இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பேரா மாநில நில மற்றும் கனிம வள இயக்குநரின் சுற்றறிக்கையின் வாயிலாக இவ்விவகாரம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பேரா மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதிய கோவில்களுக்கான எந்தவொரு விண்ணப்பத்தையும் மாநில அரசாங்கம் அங்கீகரிக்காது.

அப்படி யாராவது புதிய கோவிலை நிர்மாணிக்க விரும்பினால் அதற்கான நிலத்தை அவர்களே சொந்தமாக வாங்க வேண்டும். அந்த கோவிலை நிர்மாணிப்பதாக இருந்தாலும் கூட, அவர்கள் ஊராட்சி மன்றத்தின் அனுமதியை முதலில் பெற்றாக வேண்டும்.

ஆனால், அரசாங்க நிலத்தில் புதிய கோவில்களுக்கு இனி இடமில்லை என்று சிவநேசன் அறிவித்துள்ளார்.

இன்று ஈப்போவில் ஸ்ரீ பேராக் கட்டடத்தில் இந்து விவகாரங்களுக்கான நடவடிக்கைக் குழு கூட்டத்திற்குத் தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவநேசன் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை