Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஆற்றில் மூழ்கிய பெண்ணைத் தேடும் பணி தொடர்கிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆற்றில் மூழ்கிய பெண்ணைத் தேடும் பணி தொடர்கிறது

பெரா, ஜூன்.09-

தனது 40 நாள் குழந்தையுடன் காரில் இருந்த மாது ஒருவர், திடீரென்று நகர்ந்த காருடன் ஆற்றில் மூழ்கிய சம்பவத்தில அந்த மாதுவைத் தேடும் பணி முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 1.50 மணியளவில் பகாங், பெரா, ஜாலான் பசார் அயாம், பண்டார் பாரு பெராவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஆற்றில் தூண்டில் போட்டுக் கொண்டு இருந்த அந்த மாதுவின் கணவர், மின்னல் வேகத்தில் பாய்ந்து குழந்தையைக் காப்பாற்றிய வேளையில், தனது மனைவியைக் காப்பாற்றுவதற்குள் கார் ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட 31 வயது சகினா அகோப் என்ற மாதுவைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பகாங் மாநில தீயணைப்பு, மீட்புப்டை இலாகா அதிகாரி ஸுல்ஃபாடில் ஸகாரியா தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →