Sep 26, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் ஹன்டாவைரஸ் அபாயம் குறைவு
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் ஹன்டாவைரஸ் அபாயம் குறைவு

Share:

மலேசியாவில் ஹான்டாவைரஸ் தொற்று பரவும் அபாயம் மிகவும் குறைவாகவே உள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அண்டை நாடுகளில் ஒரு சுற்றுலா கப்பல் மூலம் இந்த வைரஸ் பரவியதாகக் கூறப்பட்ட நிலையில், மலேசியர்கள் யாரும் இதுவரை பாதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிப்லி அகமது உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எலிகளின் சிறுநீர் மற்றும் கழிவுகள் மூலம் இந்த வைரஸ் பரவக்கூடும் என்பதால், வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எலிக் கழிவுகளைச் சுத்தம் செய்யும்போது முகக்கவசம் அணிவது அவசியம். காய்ச்சல் அல்லது சுவாசக் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

Related News