May 21, 2026
Thisaigal NewsYouTube
எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் கடைசி நாள்: அதிகாரப்பூர்வமாக பணியை நிறைவு செய்த அசாம் பாக்கி!
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் கடைசி நாள்: அதிகாரப்பூர்வமாக பணியை நிறைவு செய்த அசாம் பாக்கி!

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமானஎஸ்.பி.ஆர்.எம்-இன் புதிய தலைமை ஆணையருக்கு அனைத்து அதிகாரிகளும் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்று டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை, தலைமை ஆணையர் பதவியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய அவர், எஸ்.பி.ஆர்.எம் தொடர்ந்து வலிமையாக இயக்குவதற்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பும் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரிகள் புதிய தலைமையுடன் ஒத்துழைக்கவில்லை என்றால், அது அமைப்பையே பாதிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், எந்த அமைப்பாக இருந்தாலும், அதன் தலைமையிடம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு பிரியாவிடை நிகழ்ச்சி மற்றும் அதிகாரப்பூர்வ பணிநிறைவு நிகழ்வில் உரையாற்றிய ஆசம் பாக்கி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related News