Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 28-ம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது பாரிசான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல்: அக்டோபர் 28-ம் தேதி வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது பாரிசான்

மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் பாரிசான் நேஷனல் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வரும் அக்டோபர் 28-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில பாரிசான் தலைவர் அப்துல் ராவுஃப் யுசோ தெரிவித்துள்ளார்.

தேர்தலில் கட்சியின் வெற்றியை உறுதிசெய்து, மக்களிடமிருந்து பெற்றுள்ள ஆதரவு ஆணையைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதில் வேட்பாளர்கள் பெரும் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று இரவு தங்கா பத்து நாடாளுமன்றத் தொகுதிக்கான பாரிசான் தேர்தல் பணிக்குழு தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் தேதியை வெளியிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி, அக்டோபர் 31-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் நடைபெறவுள்ளது.

அதேவேளையில் நவம்பர் 10-ஆம் தேதி முன்கூட்டியே வாக்குப்பதிவும், நவம்பர் 14-ஆம் தேதி பொது வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளன.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில், மொத்தமுள்ள 28 இடங்களில் பாரிசான் நேஷனல் 21 இடங்களைக் கைப்பற்றியது. பக்காத்தான் ஹராப்பான் 5 இடங்களையும், பெரிக்காத்தான் நேஷனல் 2 இடங்களையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →