Nov 28, 2026
Thisaigal NewsYouTube

பொதுத் தேர்தலில் ம.இ.கா. குறைந்தது 5 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும்: அஹ்மாட் ஸாஹிட் இலக்கு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பொதுத் தேர்தலில் ம.இ.கா. குறைந்தது 5 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும்: அஹ்மாட் ஸாஹிட் இலக்கு

வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. குறைந்தது ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி விருப்பம் தெரிவித்துள்ளார்.

முன்பு ம.இ.கா. ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளைத் தன்வசம் வைத்திருந்ததைச் சுட்டிக் காட்டிய அவர், அந்த எண்ணிக்கையை மீண்டும் அடைய வேண்டும் என்றார்.

இதற்காக ஜோகூர் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களில் ம.இ.கா. வெற்றி பெற உதவிய பாரிசான் நேஷனல் தோழமைக் கட்சிகளின் தேர்தல் ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த 15ஆவது பொதுத் தேர்தலில் ம.இ.கா. போட்டியிட்ட 10 நாடாளுமன்றத் தொகுதிகளில், பேராக் மாநிலம் தாப்பா தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. அத்தொகுதியில் ம.இ.கா. துணைத் தலைவர் எம். சரவணன் 5,064 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

மேலும், ம.இ.கா. தலைவர் டான் ஶ்ரீ எஸ்.எ விக்னேஸ்வரன், ஜோகூர் மாநில மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் காஸியுடனான நல்லுறவைப் பேண வேண்டும் என்றும், அடுத்த பொதுத் தேர்தலில் அவர் ஜோகூரில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இருப்பதையும் அஹ்மாட் ஸாஹிட் மறைமுகமாகச் சுட்டிக் காட்டினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
சரவாக் மாநிலத் தேர்தல்: 82 வேட்புமனு மையங்களும் மூடப்பட்டன – 14 நாள் பிரசாரம் இன்று தொடக்கம்

சரவாக் மாநிலத் தேர்தல்: 82 வேட்புமனு மையங்களும் மூடப்பட்டன – 14 நாள் பிரசாரம் இன்று தொடக்கம்

சரவாக் தேர்தலில் போட்டியின்றி வெற்றி: 11-ஆவது முறையாக சட்டமன்ற உறுப்பினரான அபாங் ஜொஹாரி

சரவாக் தேர்தலில் போட்டியின்றி வெற்றி: 11-ஆவது முறையாக சட்டமன்ற உறுப்பினரான அபாங் ஜொஹாரி

சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடாது பெரிக்காத்தான் நேஷனல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சரவாக் மாநிலத் தேர்தலில் போட்டியிடாது பெரிக்காத்தான் நேஷனல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உறுதிமொழியை மீறினால் உடனடியாகப் பதவி பறிபோகும்: நெகிரி செம்பிலான் ஆறு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உறுதி

உறுதிமொழியை மீறினால் உடனடியாகப் பதவி பறிபோகும்: நெகிரி செம்பிலான் ஆறு ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உறுதி

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் 6 புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு: ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் முன்னிலையில் உறுதிமொழி

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழுவில் 6 புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு: ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் முன்னிலையில் உறுதிமொழி

முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை! பிரதமர் அன்வார் திட்டவட்டம்

முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தும் திட்டமில்லை! பிரதமர் அன்வார் திட்டவட்டம்