முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்பதைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் சூசகமாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டுக்கு மேல் எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் காலப் பகுதியில் அரசாங்கத்தின் செயல்திறனை மேம்படுத்தவும், சிறப்பாகச் செயல்படவும் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதாக அன்வார் கூறினார்.
இன்று புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் ஏஐ தெமு ஏஐ (AI Temu AI) நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்த அந்தோணி லோக்கின் ராஜினாமாவைத் தாம் இன்னும் ஏற்கவில்லை என்றும் அன்வார் தெளிவுபடுத்தினார்.
அண்மையில் அவரைச் சந்தித்ததாகவும், முதலில் விடுப்பில் இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் அவர் கூறினார்.
தற்போதைக்கு போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளரும் துணை அமைச்சரும் அதன் நிர்வாகப் பணிகளைக் கவனிப்பர் என்றும் அன்வார் தெரிவித்தார்.








