Nov 22, 2026
Thisaigal NewsYouTube

பக்காத்தான் ஹராப்பான் – அம்னோ அரசியல் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வீர் ராம்கர்பால் அதிரடி வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பக்காத்தான் ஹராப்பான் – அம்னோ அரசியல் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வீர் ராம்கர்பால் அதிரடி வலியுறுத்து

பக்காத்தான் ஹராப்பானுக்கும் அம்னோவுக்கும் இடையிலான அரசியல் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக ஜசெக துணைப் பொதுச் செயலாளர் ராம்கர்பால் சிங் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என அம்னோ தொடர்ந்து வலியுறுத்தி வருவது, அந்தக் கட்சி இன்னமும் அரசியல் நண்பராக இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்ப்பால் கூறியுள்ளார்.

பினாங்கில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் பேசிய ராம் கர்ப்பால், அடுத்த ஆறு முதல் 12 மாதங்களுக்குள் பொதுத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அம்னோவால் பக்காத்தான் ஹராப்பான் அரசியல் ரீதியாகப் பாதிக்கப்படுமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையில், அம்னோவுடனான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க பினாங்கு பக்காத்தான் ஹராப்பான் வரும் நவம்பர் 28ஆம் தேதி கூட்டம் நடத்தவுள்ளது.

மேலும், 16ஆவது பொதுத்தேர்தலுக்கு முன்னதாக சட்டத்துறை தலைவர் மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பொறுப்புகளைப் பிரித்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் சீர்திருத்த வாக்குறுதிகளைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நிறைவேற்ற வேண்டும் என்றும் ராம்கர்பால் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →