Nov 22, 2026
Thisaigal NewsYouTube

அடுத்த பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னத்தில் போட்டியிட ஜசெக தயார்! லிம் குவான் எங் அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அடுத்த பொதுத்தேர்தலில் ராக்கெட் சின்னத்தில் போட்டியிட ஜசெக தயார்! லிம் குவான் எங் அறிவிப்பு

அடுத்த 16ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கட்சிகள் தத்தமது சின்னங்களில் போட்டியிட விரும்பினால், ஜசெக தனது ராக்கெட் சின்னத்தில் களமிறங்கத் தயாராக இருப்பதாக அதன் ஆலோசகர் லிம் குவான் எங் தெரிவித்துள்ளார்.

பினாங்கு ஜசெக நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்றும் தெளிவுபடுத்தினார்.

இதற்கிடையில், பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் கமில் முனிம், அடுத்த பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சிகள் தத்தமது சின்னங்களில் போட்டியிடுவது குறித்து தலைமைத்துவம் பரிசீலிக்க வேண்டும் என அண்மையில் தெரிவித்திருந்தார்.

கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் ஜசெக தனது ராக்கெட் சின்னத்தைத் தவிர்த்து, தீபகற்ப மலேசியாவில் பிகேஆர் சின்னத்தில் போட்டியிட்டது. 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தில் களமிறங்கியது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
ஜசெக மாநாட்டில் காலி இருக்கைகள்! அதிருப்தியில் அந்தோணி லோக்; கட்சிப் பொறுப்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

ஜசெக மாநாட்டில் காலி இருக்கைகள்! அதிருப்தியில் அந்தோணி லோக்; கட்சிப் பொறுப்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

பக்காத்தான் ஹராப்பான் – அம்னோ அரசியல் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வீர் ராம்கர்பால் அதிரடி வலியுறுத்து

பக்காத்தான் ஹராப்பான் – அம்னோ அரசியல் ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்வீர் ராம்கர்பால் அதிரடி வலியுறுத்து

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து

நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி ரத்து

பிரதமர் அன்வாரை இன்னும் சந்திக்கவில்லை – அந்தோணி லோக்

பிரதமர் அன்வாரை இன்னும் சந்திக்கவில்லை – அந்தோணி லோக்

மாறிவரும் அரசியல் சூழலில் மற்ற கட்சிகளுடன் கைகோர்க்க மசீச தயார்

மாறிவரும் அரசியல் சூழலில் மற்ற கட்சிகளுடன் கைகோர்க்க மசீச தயார்

மந்திரி பெசாராக நீடிக்க இஸ்மாயில் லாசிம் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் - ஜெ.அருள்குமார் கருத்து

மந்திரி பெசாராக நீடிக்க இஸ்மாயில் லாசிம் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் - ஜெ.அருள்குமார் கருத்து