Nov 21, 2026
Thisaigal NewsYouTube

மாறிவரும் அரசியல் சூழலில் மற்ற கட்சிகளுடன் கைகோர்க்க மசீச தயார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மாறிவரும் அரசியல் சூழலில் மற்ற கட்சிகளுடன் கைகோர்க்க மசீச தயார்

நாட்டின் தற்போதைய சிக்கலான அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, மற்ற அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை மசீச திறந்த மனதுடன் அணுகும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சோங் சின் வூன் தெரிவித்துள்ளார்.

மசீச மகளிர் பிரிவுப் பொதுக்கூட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து உரையாற்றிய அவர், அரசியலில் ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்தவர்கள், பின்னர் கூட்டாளிகளாக மாறி ஒரே மேசையில் அமர்ந்து செயல்படுவதும் தற்போதைய அரசியல் யதார்த்தம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், அரசியல் நிலைத்தன்மையையும் நாட்டின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், ஒத்துழைக்கவும் மசீச தயாராக இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இருப்பினும், அரசியல் ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றாலும், கட்சியின் அடிப்படைக் கொள்கைகளில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும், மசீசா ஒரு போதும் கடந்து செல்லக்கூடாத சில வரம்புகள் உள்ளன என்றும் சோங் சின் வூன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மந்திரி பெசாராக நீடிக்க இஸ்மாயில் லாசிம் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் - ஜெ.அருள்குமார் கருத்து

மந்திரி பெசாராக நீடிக்க இஸ்மாயில் லாசிம் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் - ஜெ.அருள்குமார் கருத்து

மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமினின் முடிவிற்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் வரவேற்பு

மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமினின் முடிவிற்கு மாநில பக்காத்தான் ஹராப்பான் வரவேற்பு

பக்காத்தானுடன் சமரச முயற்சி: துருக்கி அதிபரின் அழைப்புக்கு ஹாடி அவாங் மறுப்பு

பக்காத்தானுடன் சமரச முயற்சி: துருக்கி அதிபரின் அழைப்புக்கு ஹாடி அவாங் மறுப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் நீடிக்க பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: அரண்மனை அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் நீடிக்க பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: அரண்மனை அறிவிப்பு

இளம் மலாய் வாக்காளர்களை மீண்டும் கவர ஹராப்பானுக்கு வாய்ப்பு

இளம் மலாய் வாக்காளர்களை மீண்டும் கவர ஹராப்பானுக்கு வாய்ப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவி விலகல் சர்ச்சை: மாநில ஆட்சியாளரை அம்னோ ஏமாற்ற முயன்றதா? – ஜசெக தலைவர் கேள்வி

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவி விலகல் சர்ச்சை: மாநில ஆட்சியாளரை அம்னோ ஏமாற்ற முயன்றதா? – ஜசெக தலைவர் கேள்வி