Nov 20, 2026
Thisaigal NewsYouTube

இளம் மலாய் வாக்காளர்களை மீண்டும் கவர ஹராப்பானுக்கு வாய்ப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இளம் மலாய் வாக்காளர்களை மீண்டும் கவர ஹராப்பானுக்கு வாய்ப்பு

மலாக்கா மாநிலத் தேர்தலில் இளம் மலாய் வாக்காளர்களில் பெரும்பாலானோர் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணிகளுக்கு ஆதரவளித்திருந்தாலும், அவர்களின் ஆதரவை மீண்டும் பெற பாக்கத்தான் ஹராப்பானுக்கு வாய்ப்புள்ளதாக அரசியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இல்ஹாம் செண்டர் தலைமைச் செயலதிகாரி ஹிசோமுசின் பாக்கார், இளைஞர்கள் தொடர்ந்து ஒரே அரசியல் அணிக்கு ஆதரவளிப்பவர்கள் அல்ல என்றும், அவர்களின் ஆதரவைப் பெற மற்ற கட்சிகளுக்கும் வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக, பல்கலைக்கழகக் கல்வி பெற்ற இளம் மலாய்க்காரர்களையும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்வி பெற்ற இளைஞர்களையும் அரசியல் கட்சிகள் போதிய அளவில் அணுகவில்லை என்றார்.

இதற்கிடையில், சமூக ஊடகங்கள், குறிப்பாக டிக்டாக், இளம் வாக்காளர்களின் அரசியல் தெரிவுகளில் உணர்வுரீதியான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டினர்.

மலாக்கா தேர்தலில் 18 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் மொத்தப் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 47.3 விழுக்காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் நீடிக்க பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: அரண்மனை அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியில் நீடிக்க பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்: அரண்மனை அறிவிப்பு

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவி விலகல் சர்ச்சை: மாநில ஆட்சியாளரை அம்னோ ஏமாற்ற முயன்றதா? – ஜசெக தலைவர் கேள்வி

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவி விலகல் சர்ச்சை: மாநில ஆட்சியாளரை அம்னோ ஏமாற்ற முயன்றதா? – ஜசெக தலைவர் கேள்வி

நெகிரி செம்பிலான் மாநில அரசியல் சர்ச்சையில் புதிய திருப்பம்: மந்திரி பெசாராக இஸ்மாயில் லாசிம் நீடிக்க ஆட்சியாளர் உத்தரவு

நெகிரி செம்பிலான் மாநில அரசியல் சர்ச்சையில் புதிய திருப்பம்: மந்திரி பெசாராக இஸ்மாயில் லாசிம் நீடிக்க ஆட்சியாளர் உத்தரவு

மலாக்கா மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு பதவியேற்பு – 10 சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பு

மலாக்கா மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு பதவியேற்பு – 10 சட்டமன்ற உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்பு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி – நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி – நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்

பதவி விலகல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மந்திரி பெசாராகத் தொடர இஸ்மாயில் லாசிமுக்கு ஆட்சியாளர் உத்தரவு

பதவி விலகல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மந்திரி பெசாராகத் தொடர இஸ்மாயில் லாசிமுக்கு ஆட்சியாளர் உத்தரவு