Nov 18, 2026
Thisaigal NewsYouTube

பதவி விலகல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மந்திரி பெசாராகத் தொடர இஸ்மாயில் லாசிமுக்கு ஆட்சியாளர் உத்தரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பதவி விலகல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: மந்திரி பெசாராகத் தொடர இஸ்மாயில் லாசிமுக்கு ஆட்சியாளர் உத்தரவு

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாராக இஸ்மாயில் லாசிம் தொடர்ந்து வழக்கம் போல் தனது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஜுவாசே சட்டமன்ற உறுப்பினரான இஸ்மாயில் லாசிம், இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று மாலை ஆட்சியாளரைச் சந்தித்துப் பேசியதாகவும், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பின் போது, மந்திரி பெசார் பொறுப்பில் தொடர்ந்து இருந்து தனது பணிகளை வழக்கம் போல் மேற்கொள்ளுமாறு ஆட்சியாளர் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

எனினும், இஸ்மாயில் லாசிமின் பதவி விலகல் கடிதத்தை ஆட்சியாளர் நிராகரித்தாரா? அல்லது அது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறதா? என்பது இன்னும் தெளிவான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

இருப்பினும், இஸ்மாயில் லாசிம் தனது சமூக ஊடகப் பதிவுகளின்படி, மந்திரி பெசார் என்ற முறையில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

இதற்கிடையில், பாரிசான் நேஷனல் கூட்டணி கடந்த திங்கட்கிழமை இஸ்மாயில் லாசிம் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகியதாக அறிவித்தது.

அவருக்குப் பதிலாக புதிய மந்திரி பெசாரை நியமிப்பதற்கான வேட்பாளரின் பெயரை ஆட்சியாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக அக்கூட்டணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் ராஜினாமா: வழக்கைத் திரும்பப் பெற்ற 10 முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்

மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் ராஜினாமா: வழக்கைத் திரும்பப் பெற்ற 10 முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர்கள்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: இஸ்மாயில் லாசிமைச் சந்தித்த ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் – பதவி விலகலுக்கு இன்னும் அரச ஒப்புதல் தேவை!

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: இஸ்மாயில் லாசிமைச் சந்தித்த ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் – பதவி விலகலுக்கு இன்னும் அரச ஒப்புதல் தேவை!

மந்திரி பெசார் பதவி விலகியதாக வெளியான அறிவிப்பு – மகன் நைம் இஸ்மாயில் கேள்வி

மந்திரி பெசார் பதவி விலகியதாக வெளியான அறிவிப்பு – மகன் நைம் இஸ்மாயில் கேள்வி

நெகிரி செம்பிலான் புதிய முதலமைச்சர் பதவிக்கு ஒரே ஒரு பெயர்; அரண்மனையின் முடிவுக்குக் காத்திருக்கும் அஹ்மாட் ஸாஹிட்

நெகிரி செம்பிலான் புதிய முதலமைச்சர் பதவிக்கு ஒரே ஒரு பெயர்; அரண்மனையின் முடிவுக்குக் காத்திருக்கும் அஹ்மாட் ஸாஹிட்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் ராஜினாமா கடிதம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை - அரண்மனை தகவல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் ராஜினாமா கடிதம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை - அரண்மனை தகவல்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் பதவி விலகினார்

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் பதவி விலகினார்