Nov 17, 2026
Thisaigal NewsYouTube

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் ராஜினாமா கடிதம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை - அரண்மனை தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் ராஜினாமா கடிதம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை - அரண்மனை தகவல்

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமின் ராஜினாமா கடிதத்தின் உண்மைத் தன்மையை அரண்மனை இன்னும் உறுதிப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசியலமைப்பின்படி, மந்திரி பெசாரின் ராஜினாமா ஆட்சியாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டு அவரது ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே நடைமுறைக்கு வரும் என அரண்மனை சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராஜினாமா கடிதம் இன்று நவம்பர் 17-ஆம் தேதி அதிகாலை 12.16 மணிக்கே சிரம்பானில் உள்ள இஸ்தானா ஹிங்காப்பை வந்தடைந்ததாகவும், அதனை ஹாமிடி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் ஒப்படைத்ததாகவும் அரண்மனையின் தலைமைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, இஸ்மாயில் லாசிமுக்கு நவம்பர் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆட்சியாளரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த அனுமதியானது, பாரிசான் நேஷனல் பொதுச்செயலாளர் ஸம்ரி அப்துல் காடீர், இஸ்மாயில் லாசிமின் ராஜினாமா குறித்து அறிவிப்பதற்கு 80 நிமிடங்களுக்கு முன்பே வழங்கப்பட்டதாகவும் அரண்மனை விளக்கமளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →