Nov 15, 2026
Thisaigal NewsYouTube

16-வது பொதுத் தேர்தலிலும் பெரிக்காத்தான் - பாரிசான் கூட்டணி தொடர வேண்டும்: சனூசி நோர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
16-வது பொதுத் தேர்தலிலும் பெரிக்காத்தான் - பாரிசான் கூட்டணி தொடர வேண்டும்: சனூசி நோர்

மலாக்கா மாநிலத் தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து, 16-ஆவது பொதுத் தேர்தலிலும் பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் பாரிசான் நேஷனல் கட்சிகள் தங்களது கூட்டணியைத் தொடர வேண்டும் என பாஸ் தேர்தல் பிரிவுத் தலைவர் டத்தோ ஶ்ரீ முஹமட் சனூசி முஹமட் நோர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டணியைப் பெரும்பாலான வாக்காளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக விஸ்மா டாருல் அமானில் இன்று கெடா மாநிலத்தின் 2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் சனூசி நோர் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மலாக்கா தேர்தல் பிரசாரத்தில் குறைவாகப் பங்கேற்றது குறித்து விளக்கமளித்த அவர், வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததால் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை என்றார்.

மேலும், இந்த வரவு செலவுத் திட்டம் விரிவான ஆய்வுகளைக் கோரியதால் அதற்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருந்ததாகவும் சனூசி நோர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →