Nov 15, 2026
Thisaigal NewsYouTube

சரவாக் மாநிலத் தேர்தலில் பாரிசான் போட்டியிடாது - ஸாஹிட் திட்டவட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சரவாக் மாநிலத் தேர்தலில் பாரிசான் போட்டியிடாது - ஸாஹிட் திட்டவட்டம்

13-ஆவது சரவாக் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் போட்டியிடாது என அக்கூட்டணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி உறுதிப்படுத்தியுள்ளார்.

சரவாக்கில் அம்னோ மற்றும் பார்ட்டி பெசாகா பூமிபுத்ரா பெர்சாத்து இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிபிபி எனப்படும் மக்கள் முன்னேற்றக் கட்சியின் தீபாவளி திறந்த இல்ல நிகழ்ச்சியில், இன்று கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸாஹிட் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 13-ஆவது சரவாக் மாநிலத் தேர்தலானது, வரும் டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வேட்புமனுத் தாக்கலானது வரும் நவம்பர் 28-ஆம் தேதியும், முன்கூட்டியே வாக்குப்பதிவானது, டிசம்பர் 8-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
16-வது பொதுத் தேர்தலிலும் பெரிக்காத்தான் - பாரிசான் கூட்டணி தொடர வேண்டும்: சனூசி நோர்

16-வது பொதுத் தேர்தலிலும் பெரிக்காத்தான் - பாரிசான் கூட்டணி தொடர வேண்டும்: சனூசி நோர்

பெஜுவாங் கட்சி பொதுப் பேரவையில் மகாதீர் பங்கேற்பு - பெரிக்காத்தான் தலைவர்களைச் சந்தித்தார்

பெஜுவாங் கட்சி பொதுப் பேரவையில் மகாதீர் பங்கேற்பு - பெரிக்காத்தான் தலைவர்களைச் சந்தித்தார்

மலாக்கா தேர்தல் பின்னடைவு: தேர்தல் செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய பிகேஆர் முடிவு

மலாக்கா தேர்தல் பின்னடைவு: தேர்தல் செயல்பாடுகளை மறுஆய்வு செய்ய பிகேஆர் முடிவு

அடுத்த பொதுத்தேர்தலில் பிபிபி கட்சி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் - ஸாஹிட் உறுதி

அடுத்த பொதுத்தேர்தலில் பிபிபி கட்சி வேட்பாளர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும் - ஸாஹிட் உறுதி

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் - ஜோகூர் ஜசெகவுக்கு தியோ நீ சிங் வலியுறுத்து

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் - ஜோகூர் ஜசெகவுக்கு தியோ நீ சிங் வலியுறுத்து

மலாக்கா முதலமைச்சராக இரண்டாவது முறையாக அப்துல் ரவுஃப் யுசோ பதவியேற்பு

மலாக்கா முதலமைச்சராக இரண்டாவது முறையாக அப்துல் ரவுஃப் யுசோ பதவியேற்பு