Nov 15, 2026
Thisaigal NewsYouTube

பெஜுவாங் கட்சி பொதுப் பேரவையில் மகாதீர் பங்கேற்பு - பெரிக்காத்தான் தலைவர்களைச் சந்தித்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பெஜுவாங் கட்சி பொதுப் பேரவையில் மகாதீர் பங்கேற்பு - பெரிக்காத்தான் தலைவர்களைச் சந்தித்தார்

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முஹமட், பார்ட்டி பெஜுவாங் தானா ஆயர் கட்சியின் 2026-ஆம் ஆண்டுக்கான பொதுப் பேரவையில் கலந்து கொண்டார்.

ஷா ஆலம், ஐடியல் கன்வேன்ஷென் செண்டரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,101 வயதான மகாதீர், சக்கர நாற்காலியில் வந்து கலந்து கொண்டார்.

அவரது வருகை பேரவைப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பார்வையாளர்களிடையே ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, மகாதீரின் உரையை பெஜுவாங் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் முஹமட் ரஃபிக் ரஷிட் அலி வாசித்தார்.

மேலும், நிகழ்ச்சிக்குப் பின்னர், அக்கட்சியின் நிறுவுநரான மகாதீர், பேரவையில் கலந்து கொண்ட பெரிகாத்தான் நேஷனல் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாடினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →