Nov 15, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா முதலமைச்சராக இரண்டாவது முறையாக அப்துல் ரவுஃப் யுசோ பதவியேற்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா முதலமைச்சராக இரண்டாவது முறையாக அப்துல் ரவுஃப் யுசோ பதவியேற்பு

மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் – பெரிகாத்தான் நேஷனல் கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டத்தோ ஶ்ரீ அப்துல் ரவுஃப் யுசோ இரண்டாவது முறையாக அம்மாநில முதலமைச்சராகப் பதவியேற்றார்.

தஞ்சோங் பிடாரா சட்டமன்ற உறுப்பினரான 65 வயதான அப்துல் ரவுஃப் யுசோ, இன்று ஞாயிற்றுக்கிழமை ஆயர் குரோவில் உள்ள ஶ்ரீ நெகிரி மாளிகையில், மலாக்கா ஆளுநர் துன் முஹமட் அலி ருஸ்தாம் முன்னிலையில் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 28 சட்டமன்றத் தொகுதிகளில் 21 இடங்களைக் கைப்பற்றியது.

பக்காத்தான் ஹராப்பான் 4 இடங்களையும், பெரிகாத்தான் நேஷனல் 3 இடங்களையும் பெற்றன.

இதன் மூலம் பாரிசான் - பெரிக்காத்தான் கூட்டணி மொத்தம் 24 இடங்களைக் கைப்பற்றி, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்குத் தேவையான 19 இடங்களுக்கும் மேல் பெற்றது.

இதற்கிடையில், நேற்று இரவு பாரிசான் நேஷனல் கூட்டணித் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹி ஹாமிடி, மாநில முதலமைச்சர் பதவிக்கு அப்துல் ரவுஃப் யுசோவை இரு கூட்டணிகளும் இணைந்து பரிந்துரைக்க ஒப்புக் கொண்டுள்ளதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அவரது நியமனத்திற்கான அதிகாரப்பூர்வ கடிதமும் மலாக்கா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
அடுத்த பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் - ஜோகூர் ஜசெகவுக்கு தியோ நீ சிங் வலியுறுத்து

அடுத்த பொதுத்தேர்தலுக்கு இப்போதே தயாராக வேண்டும் - ஜோகூர் ஜசெகவுக்கு தியோ நீ சிங் வலியுறுத்து

மலாக்கா சட்டமன்றத் தேர்தல்:  மாநில அரசை அமைப்பதாக பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவிப்பு

மலாக்கா சட்டமன்றத் தேர்தல்: மாநில அரசை அமைப்பதாக பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவிப்பு

மலாக்கா வெற்றிக்கு BN–PN கூட்டணியின் திட்டமிட்ட ஒத்துழைப்பே காரணம் – தக்கியுடின்

மலாக்கா வெற்றிக்கு BN–PN கூட்டணியின் திட்டமிட்ட ஒத்துழைப்பே காரணம் – தக்கியுடின்

மலாக்கா தேர்தல் தொடர்பாக 32 விசாரணைக் கோப்புகள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைப்பு

மலாக்கா தேர்தல் தொடர்பாக 32 விசாரணைக் கோப்புகள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைப்பு

மலாக்கா தேர்தலை நேரில் பார்வையிட்ட 10 ஆசிய நாடுகளின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மலாக்கா தேர்தலை நேரில் பார்வையிட்ட 10 ஆசிய நாடுகளின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி – அடையாள அட்டையை மறந்து திரும்பிச் சென்ற பரபரப்பு

திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி – அடையாள அட்டையை மறந்து திரும்பிச் சென்ற பரபரப்பு