Nov 14, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தலை நேரில் பார்வையிட்ட 10 ஆசிய நாடுகளின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தலை நேரில் பார்வையிட்ட 10 ஆசிய நாடுகளின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மலாக்கா மாநிலத் தேர்தலில் வாக்களிக்கும் நடைமுறைகளை நேரில் பார்வையிட, ஆசிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைச் சேர்ந்த 20 பேர் கொண்ட குழு இன்று மலாக்காவுக்கு வருகை தந்தது.

நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயணம், கோலாலம்பூரில் நவம்பர் 12 முதல் நடைபெற்ற ஆசிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் 2026ஆம் ஆண்டு கூட்டத்தின் ஒரு பகுதியாக அமைந்தது.

பிலிப்பைன்ஸ், தைவான், தென்கொரியா, ஜப்பான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், இந்தியா, திமோர் லெஸ்தே, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

மலாக்காவின் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்குச் சென்ற அவர்கள், குறிப்பாகப் பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் நடைமுறைகளையும் வாக்குப்பதிவு சூழலையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சி அரசியல் கட்சி வேறுபாடுகளைக் கடந்து பெண்களின் தலைமைத்துவத்தையும் நாடாளுமன்ற ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் முயற்சி என மாஸ் எர்மியாத்தி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா சட்டமன்றத் தேர்தல்:  மாநில அரசை அமைப்பதாக பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவிப்பு

மலாக்கா சட்டமன்றத் தேர்தல்: மாநில அரசை அமைப்பதாக பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவிப்பு

மலாக்கா வெற்றிக்கு BN–PN கூட்டணியின் திட்டமிட்ட ஒத்துழைப்பே காரணம் – தக்கியுடின்

மலாக்கா வெற்றிக்கு BN–PN கூட்டணியின் திட்டமிட்ட ஒத்துழைப்பே காரணம் – தக்கியுடின்

மலாக்கா தேர்தல் தொடர்பாக 32 விசாரணைக் கோப்புகள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைப்பு

மலாக்கா தேர்தல் தொடர்பாக 32 விசாரணைக் கோப்புகள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைப்பு

திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி – அடையாள அட்டையை மறந்து திரும்பிச் சென்ற பரபரப்பு

திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி – அடையாள அட்டையை மறந்து திரும்பிச் சென்ற பரபரப்பு

போலி வாட்ஸ்அப் தகவலால் வாக்களிக்க முடியாமல் தவித்த பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்

போலி வாட்ஸ்அப் தகவலால் வாக்களிக்க முடியாமல் தவித்த பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்

மலாக்கா தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி 52.15 விழுக்காடு வாக்குப்பதிவு

மலாக்கா தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி 52.15 விழுக்காடு வாக்குப்பதிவு