Nov 14, 2026
Thisaigal NewsYouTube

போலி வாட்ஸ்அப் தகவலால் வாக்களிக்க முடியாமல் தவித்த பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
போலி வாட்ஸ்அப் தகவலால் வாக்களிக்க முடியாமல் தவித்த பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்

மலாக்கா, பத்து பெரெண்டாமில் உள்ள எஸ்எம்கே அகாமா சுல்தான் முஹமட் இடைநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், பக்கத்தான் ஹராப்பானின் பெங்காலான் பத்து தொகுதி வேட்பாளர் ஜேசன் ட்ஸே-ஸி நாதன், வாக்களிக்கச் சென்றபோது சிக்கலை எதிர்கொண்டார்.

காலை சுமார் 9 மணிக்கு வாக்குச்சாவடிக்குச் சென்ற அவருக்கு வாக்குச் சீட்டு வழங்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற போலியான வாட்ஸ்அப் தகவலை நம்பிய வாக்குச்சாவடி பொறுப்பாளர் அவரைத் தடுத்து நிறுத்தினார்.

இது குறித்து மேலதிகாரியிடம் உறுதிப்படுத்திய பின்னர், அவருக்கு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்தக் குழப்பத்திற்காக வாக்குச்சாவடி பொறுப்பாளரைக் குறை கூறவில்லை என்றும், அவர் இளம் வயதுடையவராகவும் முதன்முறையாக அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கலாம் என்றும் ஜேசன் தெரிவித்தார்.

பெங்காலான் பத்து தொகுதியில் பாரிசான் நேஷனலின் சித்தி அயிஷா மாஹ்மூட், பெர்சத்துவின் நோர்ஹிஸாம் ஹசான் பக்தி மற்றும் பெர்சாமாவின் கோ ஹான் கூன் ஆகியோருடன் ஜேசன் போட்டியிடுகிறார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி 52.15 விழுக்காடு வாக்குப்பதிவு

மலாக்கா தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி 52.15 விழுக்காடு வாக்குப்பதிவு

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம் – மந்திரி பெசார் உட்பட 11 பேர் தங்களது நிலைப்பாட்டைத் திரும்பப் பெற்றனர்

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரம் – மந்திரி பெசார் உட்பட 11 பேர் தங்களது நிலைப்பாட்டைத் திரும்பப் பெற்றனர்

முதற்கட்ட தேர்தல் முடிவுகள் இரவு 9.30 மணிக்குள் வெளியாகும் – தேர்தல் ஆணையத் தலைவர் தகவல்

முதற்கட்ட தேர்தல் முடிவுகள் இரவு 9.30 மணிக்குள் வெளியாகும் – தேர்தல் ஆணையத் தலைவர் தகவல்

களைகட்டிய மலாக்கா மாநிலத் தேர்தல்: காலை 11.30 மணி நிலவரப்படி 34.28 விழுக்காடு வாக்குப்பதிவு

களைகட்டிய மலாக்கா மாநிலத் தேர்தல்: காலை 11.30 மணி நிலவரப்படி 34.28 விழுக்காடு வாக்குப்பதிவு

மலாக்கா மாநில தேர்தல்: முன்னாள் முதலமைச்சர் அப்துல் ரவூஃப் மனைவியுடன் வந்து வாக்களித்தார்

மலாக்கா மாநில தேர்தல்: முன்னாள் முதலமைச்சர் அப்துல் ரவூஃப் மனைவியுடன் வந்து வாக்களித்தார்

மலாக்கா மாநிலத் தேர்தல்:  28 சட்டமன்றத் தொகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது

மலாக்கா மாநிலத் தேர்தல்: 28 சட்டமன்றத் தொகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது