மலாக்கா மாநிலத் தேர்தலில் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி 52.15 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மொத்தம் 3 லட்சத்து 48 ஆயிரத்து 971 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் இதே நேரத்தில் 50 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்த நிலையில், இம்முறை வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது.
செர்காம் தொகுதியில் அதிகபட்சமாக 59.24 விழுக்காடும், தஞ்சோங் பிடாராவில் 58.11 விழுக்காடும் வாக்குகள் பதிவாகியுள்ளன. பண்டார் ஹிலிர் தொகுதியில் மிகக் குறைவாக 44.26 விழுக்காடு பதிவாகியுள்ளது.
மலாக்காவின் 28 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது. இத்தேர்தலில் மொத்தம் 6 லட்சத்து 69 ஆயிரத்து 211 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.








