Nov 14, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா மாநில தேர்தல்: முன்னாள் முதலமைச்சர் அப்துல் ரவூஃப் மனைவியுடன் வந்து வாக்களித்தார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா மாநில தேர்தல்: முன்னாள் முதலமைச்சர் அப்துல் ரவூஃப் மனைவியுடன் வந்து வாக்களித்தார்

மலாக்கா மாநிலத்தின் 16-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ அப்துல் ரவூஃப் யுசோ, தனது மனைவி ஸுரியா அப்துல் அஸிஸுடன் வந்து வாக்களித்தார்.

எஸ்கே ஜெராம் வாக்குச்சாவடிக்கு காலை சுமார் 8.15 மணியளவில் வந்த அவர், 8.35 மணியளவில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

மலாக்கா மாநில பாரிசான் நேஷனல் தலைவரும், தஞ்சோங் பிடாரா சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான அப்துல் ரவுஃப், வாக்களித்த பின்னர் வாக்குச்சாவடிக்கு வெளியே காத்திருந்த வாக்காளர்களுடன் கலந்துரையாடினார்.

அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது தொகுதியில், வாக்குரிமையைப் பயன்படுத்தி, ஒரு குடிமகனாக தனது கடமையை நிறைவேற்றியதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார்.

மேலும், வாக்களிக்கும் நடைமுறைகள் சுமுகமாக நடைபெறுவதற்கு ஒழுங்கான முறையில் பணியாற்றிய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் அப்துல் ரவுஃப் நன்றி தெரிவித்தார்.

இதனிடையே, தஞ்சோங் பிடாரா சட்டமன்றத் தொகுதியில், அப்துல் ரவுஃப் யுசோ மற்றும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் யுனாஸ்ரி முஸ்தாமிரி ஆகியோருக்கு இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்கள் உட்பட மும்முனைப் போட்டியில், அப்துல் ரவுஃப், 365 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்று இந்தத் தொகுதியைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா மாநிலத் தேர்தல்:  28 சட்டமன்றத் தொகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது

மலாக்கா மாநிலத் தேர்தல்: 28 சட்டமன்றத் தொகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது

ஆயர் மோலெக் பாரிசான் நேஷனலின் பாரம்பரியத் தொகுதியாக இருந்தாலும், 52 விழுக்காடு இளம் வாக்காளர்கள் கவனம் பெறுகின்றனர் – ஏஎம்கே

ஆயர் மோலெக் பாரிசான் நேஷனலின் பாரம்பரியத் தொகுதியாக இருந்தாலும், 52 விழுக்காடு இளம் வாக்காளர்கள் கவனம் பெறுகின்றனர் – ஏஎம்கே

அமைச்சரவையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பதற்றம் இல்லை – அன்வார்

அமைச்சரவையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பதற்றம் இல்லை – அன்வார்

பாயா ரும்புட் மக்களுக்கு தனது அரசியல் அனுபவத்தைச் சேவையாக வழங்கத் தயார் – டத்தோ அஸ்மான் அபிடின்

பாயா ரும்புட் மக்களுக்கு தனது அரசியல் அனுபவத்தைச் சேவையாக வழங்கத் தயார் – டத்தோ அஸ்மான் அபிடின்

மலாக்கா தேர்தல்: நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் பிரசாரங்களை நிறுத்த வேண்டும்

மலாக்கா தேர்தல்: நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் பிரசாரங்களை நிறுத்த வேண்டும்

இளம் வாக்காளர்கள் மலாக்கா தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடும் – அட்லி ஸஹாரி

இளம் வாக்காளர்கள் மலாக்கா தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடும் – அட்லி ஸஹாரி