Nov 13, 2026
Thisaigal NewsYouTube

ஆயர் மோலெக் பாரிசான் நேஷனலின் பாரம்பரியத் தொகுதியாக இருந்தாலும், 52 விழுக்காடு இளம் வாக்காளர்கள் கவனம் பெறுகின்றனர் – ஏஎம்கே

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆயர் மோலெக் பாரிசான் நேஷனலின் பாரம்பரியத் தொகுதியாக இருந்தாலும், 52 விழுக்காடு இளம் வாக்காளர்கள் கவனம் பெறுகின்றனர் – ஏஎம்கே

மலாக்கா மாநிலத் தேர்தல், நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் வேளையில் மாநிலத்தின் முக்கிய தொகுதியான ஆயர் மோலெக் சட்டமன்றத் தொகுதி பாரிசான் நேஷனலின் பாரம்பரிய ஆதரவுத் தொகுதியாகக் கருதப்பட்டாலும், இம்முறை தேர்தலில் 18 முதல் 39 வயதுக்குட்பட்ட இளம் வாக்காளர்கள் முக்கிய கவனம் பெறுவதாக அங்காத்தான் மூடா கெஅடிலான் தகவல் பிரிவுத் தலைவர் டனிஷ் ஹைருடின் தெரிவித்துள்ளார்.

இத்தொகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள 24,614 வாக்காளர்களில் 52 விழுக்காட்டினர் இளம் வாக்காளர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2021ஆம் ஆண்டு மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் 2,802 வாக்குகள் பெரும்பான்மையில் இத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டார்.

இந்நிலையில், இளைஞர்களின் முக்கிய எதிர்பார்ப்புகளாக வேலைவாய்ப்பு மற்றும் குறைந்த விலையில் சொந்த வீடு பெறும் வாய்ப்பு ஆகியவை உள்ளதாக டனிஷ் ஹைருடின் தெரிவித்தார்.

மேலும், வேலை தேடி கோலாலம்பூர், ஜோகூர் பாரு அல்லது நெகிரி செம்பிலான் மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறதா அல்லது பெற்றோருடன் மலாக்காவிலேயே தங்க முடியுமா என்பதும் இளைஞர்களின் முக்கியக் கவலையாக இருப்பதாக அவர் கூறினார்.

மலாக்காவில் முடங்கிக் கிடக்கும் 55 மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். இத்திட்டங்கள் கட்டுமானப் பணிகளை மட்டுமின்றி வேலைவாய்ப்புகளையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மலாக்கா மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள 6 லட்சத்து 87 ஆயிரத்து 697 வாக்காளர்களில், சுமார் 3 லட்சத்து 25 ஆயிரத்து 500 பேர், அதாவது 47.34 விழுக்காட்டினர் 18 முதல் 39 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
அமைச்சரவையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பதற்றம் இல்லை – அன்வார்

அமைச்சரவையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பதற்றம் இல்லை – அன்வார்

பாயா ரும்புட் மக்களுக்கு தனது அரசியல் அனுபவத்தைச் சேவையாக வழங்கத் தயார் – டத்தோ அஸ்மான் அபிடின்

பாயா ரும்புட் மக்களுக்கு தனது அரசியல் அனுபவத்தைச் சேவையாக வழங்கத் தயார் – டத்தோ அஸ்மான் அபிடின்

மலாக்கா தேர்தல்: நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் பிரசாரங்களை நிறுத்த வேண்டும்

மலாக்கா தேர்தல்: நள்ளிரவு 12 மணிக்குள் தேர்தல் பிரசாரங்களை நிறுத்த வேண்டும்

இளம் வாக்காளர்கள் மலாக்கா தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடும் – அட்லி ஸஹாரி

இளம் வாக்காளர்கள் மலாக்கா தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடும் – அட்லி ஸஹாரி

மலாக்கா தேர்தலில் 70 விழுக்காடு வாக்குப்பதிவை எதிர்நோக்கும் தேர்தல் ஆணையம்: மழை பெய்தாலும் வாக்களிக்குமாறு வேண்டுகோள்

மலாக்கா தேர்தலில் 70 விழுக்காடு வாக்குப்பதிவை எதிர்நோக்கும் தேர்தல் ஆணையம்: மழை பெய்தாலும் வாக்களிக்குமாறு வேண்டுகோள்

அரசியல் களத்தில் மீண்டும் நஸ்ரி அஸிஸ் - பாடாங் ரெங்காஸ் தொகுதியில் போட்டியிட விருப்பம்

அரசியல் களத்தில் மீண்டும் நஸ்ரி அஸிஸ் - பாடாங் ரெங்காஸ் தொகுதியில் போட்டியிட விருப்பம்