Nov 13, 2026
Thisaigal NewsYouTube

அரசியல் களத்தில் மீண்டும் நஸ்ரி அஸிஸ் - பாடாங் ரெங்காஸ் தொகுதியில் போட்டியிட விருப்பம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அரசியல் களத்தில் மீண்டும் நஸ்ரி அஸிஸ் - பாடாங் ரெங்காஸ் தொகுதியில் போட்டியிட விருப்பம்

முன்னாள் பாடாங் ரெஙாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அஸிஸ், 16-ஆவது பொதுத் தேர்தலில் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரை தொடர்ந்து நான்கு தவணைகள் அத்தொகுதியைப் பிரதிநிதித்த முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினரான அவர், பாடாங் ரெஙாஸ் தொகுதி பாரம்பரியமாக பாரிசான் நேஷனல் கூட்டணிக்கே ஒதுக்கப்பட்டு போட்டியிடப்பட்டு வந்ததாக வலியுறுத்தியுள்ளார்.

தற்போது அந்தத் தொகுதியின் அம்னோ பிரிவுத் தலைவராகவும் இருக்கும் நஸ்ரி அஸிஸ், அமெரிக்காவுக்கான மலேசியத் தூதராகத் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்த பின்னர் மீண்டும் அத்தொகுதி மக்களைப் பிரதிநிதிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நஸ்ரி அஸிஸ் அரசியலில் இருந்து ஓய்வுபெறப் போவதாக அறிவித்திருந்தார்.

மேலும், இளம் தலைவர்களுக்கு வழிவிடும் நோக்கில் 15-ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அப்போது தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
இளம் வாக்காளர்கள் மலாக்கா தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடும் – அட்லி ஸஹாரி

இளம் வாக்காளர்கள் மலாக்கா தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடும் – அட்லி ஸஹாரி

மலாக்கா தேர்தலில் 70 விழுக்காடு வாக்குப்பதிவை எதிர்நோக்கும் தேர்தல் ஆணையம்: மழை பெய்தாலும் வாக்களிக்குமாறு வேண்டுகோள்

மலாக்கா தேர்தலில் 70 விழுக்காடு வாக்குப்பதிவை எதிர்நோக்கும் தேர்தல் ஆணையம்: மழை பெய்தாலும் வாக்களிக்குமாறு வேண்டுகோள்

காடேக் தொகுதியில் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண கே. ஜெகசீலனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் – வாக்காளர்கள் நம்பிக்கை

காடேக் தொகுதியில் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண கே. ஜெகசீலனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் – வாக்காளர்கள் நம்பிக்கை

ஆயர் மோலெக் பசார் மாலாமில் மக்களைச் சந்தித்த டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா!

ஆயர் மோலெக் பசார் மாலாமில் மக்களைச் சந்தித்த டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா!

மலாக்கா தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு திரட்டிய பிரதமர் அன்வார் – ஐந்து இடங்களில் மக்கள் சந்திப்பு

மலாக்கா தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு திரட்டிய பிரதமர் அன்வார் – ஐந்து இடங்களில் மக்கள் சந்திப்பு

கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை – ராயர் குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை – ராயர் குற்றச்சாட்டு