Nov 12, 2026
Thisaigal NewsYouTube

காடேக் தொகுதியில் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண கே. ஜெகசீலனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் – வாக்காளர்கள் நம்பிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காடேக் தொகுதியில் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண கே. ஜெகசீலனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் – வாக்காளர்கள் நம்பிக்கை

மலாக்கா மாநில தேர்தலில் காடேக் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடும் கே. ஜெகசீலனுக்கு வாக்களித்து, அவரைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்ய வேண்டும் என வாக்காளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமான கே. ஜெகசீலனை வரும் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா தேர்தலில் வெற்றி பெறச் செய்வதன் மூலம், நீண்டகாலமாக இப்பகுதி மக்கள் எதிர்நோக்கி வரும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதற்கு முன்னர் பக்காத்தான் ஹராப்பான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சாமிநாதன் சிறப்பான முறையில் சேவையாற்றியதாகவும், அதனைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலிருந்த பாரிசான் நேஷனல் தரப்பால் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவில்லை என்றும் வாக்காளர்கள் சுட்டிக் காட்டினர்.

எனவே, இம்முறை கே. ஜெகசீலனைத் தேர்வு செய்வதன் மூலம் தொகுதியின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.

மொத்தத்தில், காடேக் தொகுதியின் நீண்டகால வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதுடன், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் திறன் கொண்ட பிரதிநிதியைத் தேர்ந்தெடுப்பதே தங்களது விருப்பம் என தொகுதி வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
ஆயர் மோலெக் பசார் மாலாமில் மக்களைச் சந்தித்த டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா!

ஆயர் மோலெக் பசார் மாலாமில் மக்களைச் சந்தித்த டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா!

மலாக்கா தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு திரட்டிய பிரதமர் அன்வார் – ஐந்து இடங்களில் மக்கள் சந்திப்பு

மலாக்கா தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு திரட்டிய பிரதமர் அன்வார் – ஐந்து இடங்களில் மக்கள் சந்திப்பு

கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை – ராயர் குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை – ராயர் குற்றச்சாட்டு

மலாக்கா இந்திய வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் வலியுறுத்தல்

மலாக்கா இந்திய வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் வலியுறுத்தல்

மலாக்கா தேர்தல்: 24 தொகுதிகளில் போட்டியிடும் பிஎச் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் அட்லி ஸஹாரி

மலாக்கா தேர்தல்: 24 தொகுதிகளில் போட்டியிடும் பிஎச் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் அட்லி ஸஹாரி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு - சாஹிட் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு - சாஹிட் நம்பிக்கை