நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி விரைவில் முடிவுக்கு வரும் என பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றும், ஏற்கெனவே மாநில அரசாங்கம் அமைக்கப்பட்டபோதும் இதே ஒற்றுமை உதவியதாகவும் துணைப் பிரதமருமான ஸாஹிட் ஹாமிடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நெகிரி செம்பிலான் அரசியல் பிரச்சினைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தாம் நம்புவதாகவும், விரைவில் தீர்வு கிடைக்க இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் நேற்று இரவு நடைபெற்ற பெரிகாத்தான் நேஷனல் - பாரிசான் நேஷனல் இறுதிக் கட்டப் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.








