Nov 11, 2026
Thisaigal NewsYouTube

மலாக்காவில் நாளை அன்வார் பிரசாரம் – அடாம் அட்லி தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்காவில் நாளை அன்வார் பிரசாரம் – அடாம் அட்லி தகவல்

மலாக்கா மாநிலத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரசாரத்தை வலுப்படுத்தும் வகையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை மலாக்காவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

இதனை மலாக்கா மாநில பிகேஆர் தலைவர் மன்றத்தின் இடைக்கால தலைவர் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் தெரிவித்துள்ளார்.

நாளை நண்பகல் முதல் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் அன்வார், இரவு புக்கிட் பாரு மற்றும் பாயா ரும்புட் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்வார் என அவர் குறிப்பிட்டார்.

மலாக்கா மாநிலத்தின் 28 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில், 687,697 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இதில் பக்காத்தான் ஹராப்பான் 24 தொகுதிகளிலும், பாரிசான் நேஷனல் 23 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →