Nov 11, 2026
Thisaigal NewsYouTube

பக்காத்தான் ஹராப்பான் பிரசாரப் பதாகைகள் சேதம் – போலீசில் புகார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பக்காத்தான் ஹராப்பான் பிரசாரப் பதாகைகள் சேதம் – போலீசில் புகார்

மலாக்கா மாநிலத் தேர்தலில், பெங்காலான் பத்து சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜேசன் ட்ஸே-ஸி நாதனின் தேர்தல் பிரசாரப் பதாகைகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி இரவு மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின்போது, சாலையோரங்களில் வைக்கப்பட்டிருந்த பல பிரசாரப் பதாகைகள் அகற்றப்பட்டு, புல்வெளியில் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததைக் கட்சியின் பிரசாரக் குழுவினர் கண்டறிந்தனர்.

மேலும், சில பதாகைகள் கூர்மையான பொருளால் கிழிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பேசிய பெங்காலான் பத்து தொகுதி பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயக்குநர் முஹமட் டனிஷ் ஸைனுடின், இத்தகைய அரசியல் நடவடிக்கைகள் ஜனநாயக உணர்வுக்கு எதிரானவை எனக் கண்டனம் தெரிவித்தார்.

மேலும், எதிர்த்தரப்பினர் உட்பட எந்தத் தரப்பினரும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் அடிப்படையில் ஆரோக்கியமான போட்டியில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தமது பிரசாரக் குழுவினர் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், போலீசாரும் தேர்தல் ஆணையமும் விசாரணை மேற்கொண்டு பொறுப்பானவர்களைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
ஜசெக தலைவர்கள் விருது பெற மறுப்பதாகக் கூறுவது அவதூறு – அட்லி ஸஹாரி

ஜசெக தலைவர்கள் விருது பெற மறுப்பதாகக் கூறுவது அவதூறு – அட்லி ஸஹாரி

ஊழலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு; மக்களின் நலனே முதன்மை – அட்லி ஸஹாரி

ஊழலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு; மக்களின் நலனே முதன்மை – அட்லி ஸஹாரி

மலாக்கா மாநிலத் தேர்தல்: பி40 மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமை – டத்தோ அஸ்மான் அபிடின்

மலாக்கா மாநிலத் தேர்தல்: பி40 மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமை – டத்தோ அஸ்மான் அபிடின்

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகத் தயாரா? பாரிசானின் நெருக்கடிகளுக்கு அந்தோணி லோக் பதிலடி

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகத் தயாரா? பாரிசானின் நெருக்கடிகளுக்கு அந்தோணி லோக் பதிலடி

மலாக்காவில் இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்பு உருவாக்குவோம் - பக்காத்தான் ஹராப்பான் உறுதி

மலாக்காவில் இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்பு உருவாக்குவோம் - பக்காத்தான் ஹராப்பான் உறுதி

நஜிப் வீட்டுக் காவலில் அதிருப்தியா? வாக்குச் சீட்டு மூலம் எதிர்ப்பை காட்ட அந்தோணி லோக் வலியுறுத்து

நஜிப் வீட்டுக் காவலில் அதிருப்தியா? வாக்குச் சீட்டு மூலம் எதிர்ப்பை காட்ட அந்தோணி லோக் வலியுறுத்து