முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் வீட்டுக் காவல் அனுமதி விவகாரத்தில் அதிருப்தியடைந்துள்ள மலாக்கா வாக்காளர்கள், வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் தங்களது எதிர்ப்பை வாக்குச் சீட்டு மூலம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் வலியுறுத்தியுள்ளார்.
மலேசியர்கள் பலரால் நஜிப் ரஸாக் வீட்டுக் காவலில் தண்டனையை அனுபவிக்கும் முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், என்றாலும் மாமன்னரின் அரசியலமைப்பு அதிகாரங்களையும் நாட்டின் சட்ட ஆட்சியையும் மதிக்க வேண்டும் என்றார்.
மேலும், மன்னிப்பளிக்கும் அதிகாரம் கூட்டரசு அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஒன்று என்பதால், அதனை மதிக்க வேண்டியது அவசியம் என்றும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
நேற்று நஜிப் ரஸாக்கின் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் ஊழல் வழக்குத் தண்டனையின் எஞ்சிய காலத்தை, அவர் வீட்டுக் காவலில் அனுபவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியதைத் தொடர்ந்து, போக்குவரத்து அமைச்சர் பதவிலிருந்து அந்தோணி லோக் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.








