Nov 11, 2026
Thisaigal NewsYouTube

மலாக்காவில் இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்பு உருவாக்குவோம் - பக்காத்தான் ஹராப்பான் உறுதி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்காவில் இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்பு உருவாக்குவோம் - பக்காத்தான் ஹராப்பான் உறுதி

மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரம் 12-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக் வீட்டுக் காவல் விவகாரம், துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி முன்வைத்த நாடாளுமன்றக் கலைப்பு சவால் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து அந்தோணி லோக் விலகியிருப்பது உள்ளிட்ட அரசியல் முன்னேற்றங்கள் குறித்து மக்களுக்கு உரிய விளக்கங்கள் வழங்கப்படும் என பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 2022 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய அந்தோணி லோக்கிற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளது.

அதேவேளையில் மலாக்காவில் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி இளைஞர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதே தங்களது முக்கிய இலக்கு என பக்காத்தான் ஹராப்பான் குறிப்பிட்டுள்ளது.

DOSM எனப்படும் மலேசிய புள்ளிவிவரத் துறை தரவுகளின்படி, கடந்த 2025-ஆம் ஆண்டில் மலாக்கா தொழிலாளர்களின் சராசரி மாதச் சம்பளம் 2 ஆயிரத்து 773 ரிங்கிட் ஆக இருந்தது.

இது தேசிய அளவில் சராசரியான 2 ஆயிரத்து 940 ரிங்கிட்டை விடக் குறைவாகும்.

இந்நிலையில், தொழில்துறை முதலீடுகள் மூலம் அதிக வருமானம் தரக்கூடிய தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பயிற்சிகளை வேலைவாய்ப்புகளுடன் இணைக்கவும் திட்டமிட்டுள்ளதாக பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றுவதற்கான பிரசாரத்தை இறுதிக்கட்டம் வரை தீவிரப்படுத்துமாறு கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளையில் மலாக்காவுக்கு வெளியே இருப்பவர்கள் முன்கூட்டியே பயணத்தைத் திட்டமிட்டு, தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறும், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்றும் பக்காத்தான் ஹராப்பான் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
நஜிப் வீட்டுக் காவலில் அதிருப்தியா? வாக்குச் சீட்டு மூலம் எதிர்ப்பை காட்ட அந்தோணி லோக் வலியுறுத்து

நஜிப் வீட்டுக் காவலில் அதிருப்தியா? வாக்குச் சீட்டு மூலம் எதிர்ப்பை காட்ட அந்தோணி லோக் வலியுறுத்து

மலாக்கா தேர்தல்: முன்கூட்டியே வாக்குப்பதிவில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வாக்களிப்பு

மலாக்கா தேர்தல்: முன்கூட்டியே வாக்குப்பதிவில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வாக்களிப்பு

இளைஞர்களுடன் கலந்துரையாட ‘கோபிலே ஹராப்பான்’ - பக்காத்தான் ஹராப்பானின் புதிய முயற்சி

இளைஞர்களுடன் கலந்துரையாட ‘கோபிலே ஹராப்பான்’ - பக்காத்தான் ஹராப்பானின் புதிய முயற்சி

மலாக்கா தேர்தலுக்குப் பிறகு பக்காத்தான் கூட்டணியின் அரசியல் திசை மறுபரிசீலனை – அடாம் அட்லி தகவல்

மலாக்கா தேர்தலுக்குப் பிறகு பக்காத்தான் கூட்டணியின் அரசியல் திசை மறுபரிசீலனை – அடாம் அட்லி தகவல்

காடேக் தொகுதியை நவீன விவசாய மையமாக மாற்ற திட்டம் - பக்காத்தான் வேட்பாளர் ஜெகசீலன் உறுதி

காடேக் தொகுதியை நவீன விவசாய மையமாக மாற்ற திட்டம் - பக்காத்தான் வேட்பாளர் ஜெகசீலன் உறுதி

ஜோகூருக்கு இணையாக ஊதியத்தை உயர்த்த வேண்டும் - மலாக்கா பாயா ரும்புட் தொகுதி இந்தியர்கள் கோரிக்கை

ஜோகூருக்கு இணையாக ஊதியத்தை உயர்த்த வேண்டும் - மலாக்கா பாயா ரும்புட் தொகுதி இந்தியர்கள் கோரிக்கை