Nov 10, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தலுக்குப் பிறகு பக்காத்தான் கூட்டணியின் அரசியல் திசை மறுபரிசீலனை – அடாம் அட்லி தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தலுக்குப் பிறகு பக்காத்தான் கூட்டணியின் அரசியல் திசை மறுபரிசீலனை – அடாம் அட்லி தகவல்

மலாக்கா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனது அரசியல் திசை மற்றும் எதிர்கால வியூகங்கள் குறித்து மறுபரிசீலனை செய்யும் என அம்மாநில கெஅடிலான் தலைவரும், உயர்கல்வி துணை அமைச்சரும் அடாம் அட்லி அப்துல் ஹாலிம் தெரிவித்துள்ளார்.

அண்மைய காலமாக நாட்டின் அரசியல் சூழலில் பல்வேறு புதிய அரசியல் நகர்வுகளும் கூட்டணி மாற்றங்கள் தொடர்பான முன்னேற்றங்களும் இடம் பெற்று வருவதாக, மலாக்கா பக்கத்தான் ஹராப்பான் தலைமைத் தேர்தல் செயல்பாட்டு மையத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அடாம் அட்லி குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பான முடிவுகள் அனைத்தும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைமைத்துவக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமான நிலைப்பாடு எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தற்போதைய அரசியல் சூழலில் உருவாகி வரும் பிரச்சினைகளையும் நாம் புறக்கணிக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக, ஒற்றுமை அரசாங்கத்திற்குள் நிலவும் சிக்கல்கள், நாடாளுமன்றத்தில் நடைபெறும் அரசியல் நகர்வுகள், தேசிய அளவிலான உள்கட்சி முடிவுகள், பாரிசான் நேஷனலின் முடிவுகள் மற்றும் அங்கு நிகழும் மாற்றங்கள், பாஸ்- உடனான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையே, இன்று நடைபெற்ற முன்கூட்டியே வாக்குப்பதிவு தொடர்பாக கருத்துரைத்த அவர், போலீஸ் மற்றும் ராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினரின் குடியிருப்புகளைக் கட்டவும் பராமரிக்கவும் 2027 வரவு செலவுத் திட்டத்தில் 2.3 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்த நிதி மூலம் பாதுகாப்பான குடியிருப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், பாதுகாப்புப் படையினர் தங்களது பணிகளில் ஈடுபட்டிருக்கும் காலங்களில், அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், புகார்களைக் கையாளுதல் மற்றும் பணிகளைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் அடாம் அட்லி தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
காடேக் தொகுதியை நவீன விவசாய மையமாக மாற்ற திட்டம் - பக்காத்தான் வேட்பாளர் ஜெகசீலன் உறுதி

காடேக் தொகுதியை நவீன விவசாய மையமாக மாற்ற திட்டம் - பக்காத்தான் வேட்பாளர் ஜெகசீலன் உறுதி

ஜோகூருக்கு இணையாக ஊதியத்தை உயர்த்த வேண்டும் - மலாக்கா பாயா ரும்புட் தொகுதி இந்தியர்கள் கோரிக்கை

ஜோகூருக்கு இணையாக ஊதியத்தை உயர்த்த வேண்டும் - மலாக்கா பாயா ரும்புட் தொகுதி இந்தியர்கள் கோரிக்கை

மலாக்கா மாநிலத் தேர்தல்: அசஹான் சட்டமன்றத் தொகுதி – டேனேஷ்; புதிய முகம்; மக்கள் சேவையில் நம்பிக்கையுடன் களமிறங்கும் வேட்பாளர்

மலாக்கா மாநிலத் தேர்தல்: அசஹான் சட்டமன்றத் தொகுதி – டேனேஷ்; புதிய முகம்; மக்கள் சேவையில் நம்பிக்கையுடன் களமிறங்கும் வேட்பாளர்

பெண்களின் குரலுக்கு அரசியல் களம் அமைத்த பக்காத்தான் ஹராப்பான்: ஆறு பெண் வேட்பாளர்கள் களத்தில்; மொத்த வாக்காளர்களில் 50.73 விழுக்காட்டினர் பெண்கள் – மலாக்கா தேர்தலில் முக்கியத்துவம் பெறும் பெண் தலைமைத்துவம்

மலாக்காவின் எதிர்காலத்திற்கு 12 முக்கிய இலக்குகள்

மலாக்காவின் எதிர்காலத்திற்கு 12 முக்கிய இலக்குகள்

மலாக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்! தொடங்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு தாருங்கள்! - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி வேண்டுகோள்

மலாக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்! தொடங்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு தாருங்கள்! - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி வேண்டுகோள்