மலாக்கா மாநிலத் தேர்தலில் அசஹான் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் மக்கள் நீதிக் கட்சி வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார் 37 வயதான டேனேஷ் பி.
கட்டுமானத் துறையில் பாதுகாப்பு மற்றும் சுகாதார மேற்பார்வையாளராகப் பணியாற்றும் இவர், தொழில்முறை அனுபவத்துடன் அரசியல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். அலோர் காஜா மக்கள் நீதிக் கட்சிப் பிரிவின் செயற்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
அரசியலில் புதியவரான டேனேஷ், இந்தத் தேர்தலைத் தனது திறமையை மக்களிடம் நிரூபிப்பதற்கான வாய்ப்பாகக் கருதுகிறார். அரசியல் அனுபவம் கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை எதிர்கொள்வதில் தயக்கமின்றி, வாக்காளர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறார்.
அசஹான் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் ஃபைருல் நிஜாம் ரோஸ்லான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து டேனேஷ் களமிறங்கியுள்ளார்.
தொழில்துறையில் பெற்ற அனுபவத்தையும் அரசியல் ஈடுபாட்டையும் இணைத்து, மக்களின் பிரச்சினைகளை அறிந்து செயல்படுவதே தனது அணுகுமுறையாகக் கொண்டுள்ளார் டேனேஷ்.
புதிய தலைமுறையின் அரசியல் பங்களிப்பைப் பிரதிபலிக்கும் வேட்பாளராக அசஹான் தொகுதியில் அறிமுகமாகியுள்ள அவர், மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் நம்பிக்கையைப் பெறும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.








