Nov 8, 2026
Thisaigal NewsYouTube

மலாக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்! தொடங்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு தாருங்கள்! - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி வேண்டுகோள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்! தொடங்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு தாருங்கள்! - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி வேண்டுகோள்

மலாக்கா மாநிலத் தேர்தலில் புதிய வாக்குறுதிகளைக் கூறி மக்களை ஏமாற்ற வரவில்லை; ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள மக்கள் நலத் திட்டங்களையும் மேம்பாட்டுப் பணிகளையும் தொடர்ந்து நிறைவேற்ற பக்காத்தான் ஹராப்பானுக்கு மீண்டும் வாய்ப்பளிக்குமாறு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மலாக்கா மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மலாக்கா, புக்கிட் ரம்பாய், தாமான் புக்கிட் ரம்பாயில் நடைபெற்ற மடானி மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மலாக்காவின் வளர்ச்சியை விரைவுபடுத்த மத்திய அரசாங்கத்திற்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையே வலுவான ஒத்துழைப்பு அவசியம் எனக் குறிப்பிட்ட அன்வார், வறுமை ஒழிப்பு, மக்களின் வருமான உயர்வு, குடும்பங்களுக்கான நிதியுதவி மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் தடையின்றித் தொடர வேண்டும் என்றார்.

அதேவேளையில், குடிநீர், மின்சாரம், வடிகால் பராமரிப்பு, சாலைகள் மற்றும் பள்ளிகளின் அடிப்படை வசதிகள் தொடர்பான மக்களின் பிரச்சினைகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் ஒப்புக் கொண்டார்.

அரசாங்கத்தின் செயல்பாடுகளை மதிப்பிடுவதற்கும், தங்களது எதிர்பார்ப்புகளை முன்வைப்பதற்கும் மக்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் அவர் வலியுறுத்தினார்.

எனவே, மலாக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்தத் தேர்தலில், ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள் முழுமையடையவும், மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயல்படக்கூடிய மாநில நிர்வாகம் அமையவும் பக்காத்தான் ஹராப்பானுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதே பிரதமரின் முக்கிய வேண்டுகோளாக அமைந்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா மாநிலத் தேர்தல்: அசஹான் சட்டமன்றத் தொகுதி – டேனேஷ்; புதிய முகம்; மக்கள் சேவையில் நம்பிக்கையுடன் களமிறங்கும் வேட்பாளர்

மலாக்கா மாநிலத் தேர்தல்: அசஹான் சட்டமன்றத் தொகுதி – டேனேஷ்; புதிய முகம்; மக்கள் சேவையில் நம்பிக்கையுடன் களமிறங்கும் வேட்பாளர்

பெண்களின் குரலுக்கு அரசியல் களம் அமைத்த பக்காத்தான் ஹராப்பான்: ஆறு பெண் வேட்பாளர்கள் களத்தில்; மொத்த வாக்காளர்களில் 50.73 விழுக்காட்டினர் பெண்கள் – மலாக்கா தேர்தலில் முக்கியத்துவம் பெறும் பெண் தலைமைத்துவம்

மலாக்காவின் எதிர்காலத்திற்கு 12 முக்கிய இலக்குகள்

மலாக்காவின் எதிர்காலத்திற்கு 12 முக்கிய இலக்குகள்

மக்கள் சேவைக்காக வழக்கறிஞர் தொழிலைத் துறந்த ஜேசன்!

மக்கள் சேவைக்காக வழக்கறிஞர் தொழிலைத் துறந்த ஜேசன்!

“அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அமைச்சர்களை நீக்குங்கள்" - அன்வாருக்கு முஹிடின் வலியுறுத்து

“அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அமைச்சர்களை நீக்குங்கள்" - அன்வாருக்கு முஹிடின் வலியுறுத்து

காடேக் தொகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜெகசீலன் உறுதி

காடேக் தொகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜெகசீலன் உறுதி