Nov 8, 2026
Thisaigal NewsYouTube

மலாக்காவின் எதிர்காலத்திற்கு 12 முக்கிய இலக்குகள்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்காவின் எதிர்காலத்திற்கு 12 முக்கிய இலக்குகள்

இளைஞர்களுக்கு 30 விழுக்காடு ஊராட்சி மன்ற ஒப்பந்தங்கள்; 2032ஆம் ஆண்டுக்குள் 2.5 கோடி சுற்றுலாப் பயணிகளைக் கவர இலக்கு – ஸ்மார்ட் மலாக்காவுக்கும் புதிய திட்டங்கள்!

மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, வீடமைப்பு, வேலைவாய்ப்பு, இளைஞர் மேம்பாடு, சுற்றுலா வளர்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு, பக்காத்தான் ஹராப்பான் தனது தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

‘அஸ்பிராசி மலாக்கா ரூமா கித்தா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கொள்கை அறிக்கை, மலாக்கா மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் மூன்று முக்கியத் தூண்களையும் 12 முன்னுரிமை இலக்குகளையும் கொண்டுள்ளது.

இதில் இளைஞர்களுக்கான பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் திட்டம் முக்கிய இடம் பிடித்துள்ளது. குறிப்பாக, ஊராட்சி மன்றங்களின் ஒப்பந்தப் பணிகளில் 30 விழுக்காட்டை இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவதுடன், தொழில்முனைவோர் அனுபவத்தையும் வளர்த்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

அதேவேளையில், 2032ஆம் ஆண்டிற்குள் மலாக்காவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2 கோடியே 50 லட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் துறையின் வளர்ச்சியால் உள்ளூர் வணிகர்களுக்கும் மக்களுக்கும் கூடுதல் வருமான வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்திலும் மலாக்காவை முன்னோடி மாநிலமாக உருவாக்கும் நோக்கில், ஸ்மார்ட் மலாக்கா திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதுடன், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வீடமைப்புத் துறையில், மக்களின் பொருளாதார நிலைக்கு ஏற்ற வீடுகளை வாங்கவும் வாடகைக்கு எடுக்கவும் வாய்ப்புகளை விரிவுபடுத்துவது, பயன்படுத்தப்படாத நிலங்களை விவசாயம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. நிலக் குத்தகைக் காலத்தை முன்கூட்டியே நீட்டிக்க விண்ணப்பிக்கும் வசதியையும் ஏற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பெண் தொழில்முனைவோருக்குச் சிறப்பு மானியங்கள், பணிபுரியும் பெண்களுக்கு உதவும் வகையில் அரசாங்கக் குழந்தைப் பராமரிப்பு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், சிறு வணிகர்களுக்கு மூலதன உதவிகளை எளிதாக்குதல் போன்ற திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனுடன், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு, சமூக நலன், மதச் சுதந்திரம், பல்லின மக்களிடையிலான நல்லிணக்கம், ஊழலற்ற நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் வரிப் பணத்தைப் பொறுப்புடன் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

மலாக்கா பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி ஸஹாரி வெளியிட்டுள்ள இந்தக் கொள்கை அறிக்கை, மக்களுடனான சந்திப்புகள் மற்றும் நிர்வாக அனுபவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில், வேலைவாய்ப்பு, வருமானம், வீடமைப்பு, சுற்றுலா மற்றும் நவீன நிர்வாகம் எனப் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய இந்த 12 முன்னுரிமை இலக்குகள், மலாக்காவின் எதிர்கால வளர்ச்சிக்கான பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் வாக்குறுதிகளாக முன்வைக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான வாய்ப்பை வாக்காளர்கள் தங்களின் தேர்தல் முடிவின் மூலம் தீர்மானிக்க உள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா மாநிலத் தேர்தல்: அசஹான் சட்டமன்றத் தொகுதி – டேனேஷ்; புதிய முகம்; மக்கள் சேவையில் நம்பிக்கையுடன் களமிறங்கும் வேட்பாளர்

மலாக்கா மாநிலத் தேர்தல்: அசஹான் சட்டமன்றத் தொகுதி – டேனேஷ்; புதிய முகம்; மக்கள் சேவையில் நம்பிக்கையுடன் களமிறங்கும் வேட்பாளர்

பெண்களின் குரலுக்கு அரசியல் களம் அமைத்த பக்காத்தான் ஹராப்பான்: ஆறு பெண் வேட்பாளர்கள் களத்தில்; மொத்த வாக்காளர்களில் 50.73 விழுக்காட்டினர் பெண்கள் – மலாக்கா தேர்தலில் முக்கியத்துவம் பெறும் பெண் தலைமைத்துவம்

மலாக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்! தொடங்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு தாருங்கள்! - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி வேண்டுகோள்

மலாக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்! தொடங்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு தாருங்கள்! - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி வேண்டுகோள்

மக்கள் சேவைக்காக வழக்கறிஞர் தொழிலைத் துறந்த ஜேசன்!

மக்கள் சேவைக்காக வழக்கறிஞர் தொழிலைத் துறந்த ஜேசன்!

“அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அமைச்சர்களை நீக்குங்கள்" - அன்வாருக்கு முஹிடின் வலியுறுத்து

“அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அமைச்சர்களை நீக்குங்கள்" - அன்வாருக்கு முஹிடின் வலியுறுத்து

காடேக் தொகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜெகசீலன் உறுதி

காடேக் தொகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜெகசீலன் உறுதி