Nov 8, 2026
Thisaigal NewsYouTube

“அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அமைச்சர்களை நீக்குங்கள்" - அன்வாருக்கு முஹிடின் வலியுறுத்து

திசைகள் செய்திப்பிரிவு
Share:
“அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் அமைச்சர்களை நீக்குங்கள்" - அன்வாருக்கு முஹிடின் வலியுறுத்து

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் இணக்கமாகச் செயல்படாத அமைச்சர்களை உடனடியாகப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று பெர்சாத்து தலைவர் டான் ஶ்ரீ முஹிடின் யாசின் வலியுறுத்தியுள்ளார்.

மலாக்கா மாநிலத் தேர்தலில் பெங்காலான் பத்து தொகுதி பெர்சாத்து வேட்பாளரை ஆதரித்து இன்று பிரசாரம் மேற்கொண்ட அவர், இத்தகைய அமைச்சர்கள் அரசாங்கத்தின் கொள்கைகளைச் சீர்குலைக்கக்கூடும் என்பதால், பிரதமர், அமைச்சரவையை மறுசீரமைத்து அவர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தாம் பிரதமராக இருந்திருந்தால், தன்னுடன் ஒத்துழைக்காத அமைச்சர்களை உடனடியாக நீக்குவதுடன், அமைச்சரவையையும் மறுசீரமைத்திருப்பேன் என்றும் முஹிடின் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், அன்வார் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே அத்தகைய அமைச்சர்களின் நோக்கமாக இருக்கலாம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா மாநிலத் தேர்தல்: அசஹான் சட்டமன்றத் தொகுதி – டேனேஷ்; புதிய முகம்; மக்கள் சேவையில் நம்பிக்கையுடன் களமிறங்கும் வேட்பாளர்

பெண்களின் குரலுக்கு அரசியல் களம் அமைத்த பக்காத்தான் ஹராப்பான்: ஆறு பெண் வேட்பாளர்கள் களத்தில்; மொத்த வாக்காளர்களில் 50.73 விழுக்காட்டினர் பெண்கள் – மலாக்கா தேர்தலில் முக்கியத்துவம் பெறும் பெண் தலைமைத்துவம்

மலாக்காவின் எதிர்காலத்திற்கு 12 முக்கிய இலக்குகள்

மலாக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்! தொடங்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு தாருங்கள்! - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி வேண்டுகோள்

மக்கள் சேவைக்காக வழக்கறிஞர் தொழிலைத் துறந்த ஜேசன்!

காடேக் தொகுதியின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் – ஜெகசீலன் உறுதி