Nov 10, 2026
Thisaigal NewsYouTube

ஜோகூருக்கு இணையாக ஊதியத்தை உயர்த்த வேண்டும் - மலாக்கா பாயா ரும்புட் தொகுதி இந்தியர்கள் கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜோகூருக்கு இணையாக ஊதியத்தை உயர்த்த வேண்டும் - மலாக்கா பாயா ரும்புட் தொகுதி இந்தியர்கள் கோரிக்கை

மலாக்கா மாநிலத் தேர்தலில், பாயா ரும்புட் தொகுதியில் வெற்றிபெறும் வேட்பாளர்கள், இந்திய சமூகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பராமரிப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி இந்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மலாக்கா மாநிலத்தின் ஊதியத்தை ஜோகூர் மாநிலத்திற்கு இணையான நிலைக்கு உயர்த்தி, உள்ளூர் இளைஞர்கள் வேலை தேடி வெளியேறுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் தேர்தலில் வெற்றி பெறும் பிரதிநிதிகள் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனிடையே, வேலைவாய்ப்பு மற்றும் ஊதியப் பிரச்சினைகளைத் தவிர, பாயா ரும்புட் தொகுதியில் உள்ள இந்து வழிபாட்டுத் தலங்களின் நலன் மற்றும் பராமரிப்புக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதி உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அப்பகுதி இந்திய சமூகத்தினர் எதிர்பார்க்கின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
காடேக் தொகுதியை நவீன விவசாய மையமாக மாற்ற திட்டம் - பக்காத்தான் வேட்பாளர் ஜெகசீலன் உறுதி

காடேக் தொகுதியை நவீன விவசாய மையமாக மாற்ற திட்டம் - பக்காத்தான் வேட்பாளர் ஜெகசீலன் உறுதி

மலாக்கா மாநிலத் தேர்தல்: அசஹான் சட்டமன்றத் தொகுதி – டேனேஷ்; புதிய முகம்; மக்கள் சேவையில் நம்பிக்கையுடன் களமிறங்கும் வேட்பாளர்

மலாக்கா மாநிலத் தேர்தல்: அசஹான் சட்டமன்றத் தொகுதி – டேனேஷ்; புதிய முகம்; மக்கள் சேவையில் நம்பிக்கையுடன் களமிறங்கும் வேட்பாளர்

பெண்களின் குரலுக்கு அரசியல் களம் அமைத்த பக்காத்தான் ஹராப்பான்: ஆறு பெண் வேட்பாளர்கள் களத்தில்; மொத்த வாக்காளர்களில் 50.73 விழுக்காட்டினர் பெண்கள் – மலாக்கா தேர்தலில் முக்கியத்துவம் பெறும் பெண் தலைமைத்துவம்

மலாக்காவின் எதிர்காலத்திற்கு 12 முக்கிய இலக்குகள்

மலாக்காவின் எதிர்காலத்திற்கு 12 முக்கிய இலக்குகள்

மலாக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்! தொடங்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு தாருங்கள்! - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி வேண்டுகோள்

மலாக்காவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் தேர்தல்! தொடங்கிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு தாருங்கள்! - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிரடி வேண்டுகோள்

மக்கள் சேவைக்காக வழக்கறிஞர் தொழிலைத் துறந்த ஜேசன்!

மக்கள் சேவைக்காக வழக்கறிஞர் தொழிலைத் துறந்த ஜேசன்!