Nov 11, 2026
Thisaigal NewsYouTube

ஜசெக தலைவர்கள் விருது பெற மறுப்பதாகக் கூறுவது அவதூறு – அட்லி ஸஹாரி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஜசெக தலைவர்கள் விருது பெற மறுப்பதாகக் கூறுவது அவதூறு – அட்லி ஸஹாரி

மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது, ஜசெக தலைவர்கள் மலாய் ஆட்சியாளர்களின் அரச விருதுகளை ஏற்க மறுப்பதாக அம்னோ உச்சமன்ற உறுப்பினர் அஹ்மாட் மஸ்லான் முன்வைத்த குற்றச்சாட்டு அவதூறானது என மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி சஹாரி தெரிவித்துள்ளார்.

இத்தகைய கருத்துகள், நடைபெற்று வரும் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்றும் அவர் சாடினார்.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் இருந்த காலத்திலும், மலாக்காவிலும் ஜசெக தலைவர்கள் பலர் அரச விருதுகளைப் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் உள்ளிட்ட தலைவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

முன்னதாக, கம்போங் லெந்து டாலாமில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அஹ்மாட் மஸ்லான், மலாய் ஆட்சியாளர்களின் அந்தஸ்தையும் அரச பரிபாலனத்தையும் அங்கீகரிக்க விரும்பாததால் ஜசெக தலைவர்கள் அரச விருதுகளை ஏற்கத் தயங்குவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தக் கருத்துக்குப் பதிலளித்த அட்லி ஸஹாரி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
ஊழலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு; மக்களின் நலனே முதன்மை – அட்லி ஸஹாரி

ஊழலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு; மக்களின் நலனே முதன்மை – அட்லி ஸஹாரி

மலாக்கா மாநிலத் தேர்தல்: பி40 மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமை – டத்தோ அஸ்மான் அபிடின்

மலாக்கா மாநிலத் தேர்தல்: பி40 மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமை – டத்தோ அஸ்மான் அபிடின்

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகத் தயாரா? பாரிசானின் நெருக்கடிகளுக்கு அந்தோணி லோக் பதிலடி

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகத் தயாரா? பாரிசானின் நெருக்கடிகளுக்கு அந்தோணி லோக் பதிலடி

மலாக்காவில் இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்பு உருவாக்குவோம் - பக்காத்தான் ஹராப்பான் உறுதி

மலாக்காவில் இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்பு உருவாக்குவோம் - பக்காத்தான் ஹராப்பான் உறுதி

நஜிப் வீட்டுக் காவலில் அதிருப்தியா? வாக்குச் சீட்டு மூலம் எதிர்ப்பை காட்ட அந்தோணி லோக் வலியுறுத்து

நஜிப் வீட்டுக் காவலில் அதிருப்தியா? வாக்குச் சீட்டு மூலம் எதிர்ப்பை காட்ட அந்தோணி லோக் வலியுறுத்து

மலாக்கா தேர்தல்: முன்கூட்டியே வாக்குப்பதிவில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வாக்களிப்பு

மலாக்கா தேர்தல்: முன்கூட்டியே வாக்குப்பதிவில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வாக்களிப்பு