Nov 11, 2026
Thisaigal NewsYouTube

ஊழலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு; மக்களின் நலனே முதன்மை – அட்லி ஸஹாரி

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஊழலுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு; மக்களின் நலனே முதன்மை – அட்லி ஸஹாரி

மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் 12ஆவது நாளில், ஊழலுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டையும், மக்களின் நலனை மையமாகக் கொண்ட தேர்தல் அணுகுமுறையையும் பக்காத்தான் ஹராப்பான் வலியுறுத்தியுள்ளது.

இதனை மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், அமானா கட்சியின் உதவித் தலைவருமான டத்தோ ஸ்ரீ அட்லி ஸஹாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசியலில் அண்மையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் குறித்து மக்களுக்கு உரிய விளக்கங்களை வழங்கி, தேர்தல் பிரசாரத்தை நிதானமாகத் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மலாக்காவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், இளைஞர்களுக்கு நிலையான வருமானம் மற்றும் தொழில் முன்னேற்ற வாய்ப்புகளை ஏற்படுத்துவதே முக்கிய இலக்கு என்றார்.

சுகாதார மற்றும் வேலையிட பாதுகாப்பு இலாகாவான DOSM – மின் புள்ளிவிவரங்களின்படி, 2025ஆம் ஆண்டில் மலாக்கா தொழிலாளர்களின் சராசரி மாதச் சம்பளத்தின் நடுநிலை அளவு 2,773 ரிங்கிட்டாக இருந்ததாகவும், தேசிய அளவில் அது 2,940 ரிங்கிட்டாகப் பதிவானதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

இதற்கிடையில், தொழிற்பயிற்சிகளை உண்மையான வேலைவாய்ப்புகளுடன் இணைத்து, பயிற்சி பெறுவோர் வேலை பெறுவதையும் வருமானத்தை உயர்த்துவதையும் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்று, நேர்மையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தை முன்னெடுக்க பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
ஜசெக தலைவர்கள் விருது பெற மறுப்பதாகக் கூறுவது அவதூறு – அட்லி ஸஹாரி

ஜசெக தலைவர்கள் விருது பெற மறுப்பதாகக் கூறுவது அவதூறு – அட்லி ஸஹாரி

மலாக்கா மாநிலத் தேர்தல்: பி40 மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமை – டத்தோ அஸ்மான் அபிடின்

மலாக்கா மாநிலத் தேர்தல்: பி40 மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமை – டத்தோ அஸ்மான் அபிடின்

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகத் தயாரா? பாரிசானின் நெருக்கடிகளுக்கு அந்தோணி லோக் பதிலடி

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகத் தயாரா? பாரிசானின் நெருக்கடிகளுக்கு அந்தோணி லோக் பதிலடி

மலாக்காவில் இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்பு உருவாக்குவோம் - பக்காத்தான் ஹராப்பான் உறுதி

மலாக்காவில் இளைஞர்களுக்கு தரமான வேலைவாய்ப்பு உருவாக்குவோம் - பக்காத்தான் ஹராப்பான் உறுதி

நஜிப் வீட்டுக் காவலில் அதிருப்தியா? வாக்குச் சீட்டு மூலம் எதிர்ப்பை காட்ட அந்தோணி லோக் வலியுறுத்து

நஜிப் வீட்டுக் காவலில் அதிருப்தியா? வாக்குச் சீட்டு மூலம் எதிர்ப்பை காட்ட அந்தோணி லோக் வலியுறுத்து

மலாக்கா தேர்தல்: முன்கூட்டியே வாக்குப்பதிவில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வாக்களிப்பு

மலாக்கா தேர்தல்: முன்கூட்டியே வாக்குப்பதிவில் 95 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் வாக்களிப்பு