Nov 11, 2026
Thisaigal NewsYouTube

மலாக்காவில் சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்காவில் சிறந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்

மலாக்கா மாநிலத்திற்கு கொண்டு வரப்படும் ஒவ்வொரு முதலீடும், மக்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பையும் அதிக ஊதியத்தையும் வழங்க வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் விரும்புகிறது.

மலாக்கா மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோ ஶ்ரீ அட்லி ஸஹாரி இதனைத் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் மலாக்கா மக்களின் சராசரி மாதச் சம்பளம் 2,773 ரிங்கிட்டாக இருந்தது. இது தேசிய சராசரியான 2,940 ரிங்கிட்டைவிடக் குறைவாகும்.

எனவே, புதிய முதலீடுகள் மூலம் இளைஞர்களுக்குத் தகுதிக்கேற்ற தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள், நிலையான வருமானம் மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

மேலும், தொழில்துறையின் தேவைக்கேற்ப திறன் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஆயர் குரோவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அட்லி ஸஹாரி இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →