Nov 12, 2026
Thisaigal NewsYouTube

காடேக் சட்டமன்ற தொகுதியில் ஜெகசீலன் நிச்சயம் வெற்றி பெறுவார் - ராம்கர்பால் சிங் ஆதரவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
காடேக் சட்டமன்ற தொகுதியில் ஜெகசீலன் நிச்சயம் வெற்றி பெறுவார் - ராம்கர்பால் சிங் ஆதரவு

வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், காடேக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும், பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் 45 வயதான கே. ஜெகசீலன், நிச்சயமாக மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றி பெறுவார் என ஜசெக சட்டப் பிரிவு தலைவரும், புக்கிட் கெளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்பால் சிங் தெரிவித்துள்ளார்.

காடேக் பகுதியில் நேற்றிரவு, Persatuan Abang Adik Gadek அமைப்பு ஏற்பாடு செய்த திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், காடேக் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவித்தார்.

தற்போது பரபரப்பாகப் பேசப்படும் விவகாரங்களில் முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் விடுதலை தொடர்பான விவகாரமும் ஒன்று என்றும், இது குறித்து நாடாளுமன்றத்தில் பல கேள்விகள் எழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வேட்பாளர் ஜெகசீலன், காடேக் சட்டமன்றத் தொகுதி மக்களை வீடு வீடாகச் சென்று தாம் சந்தித்த போது, அவர்கள் அனைவரும் எதிர்பார்ப்பது எப்போதும் எளிதாக அணுகக்கூடிய ஒரு சட்டமன்ற உறுப்பினரைத்தான் என்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், உள்ளூரைச் சேர்ந்த தமக்கு அனைத்து இன மக்களும் மிகுந்த ஆதரவு அளிப்பதாக ஜெகசீலன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →