மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பக்காத்தான் ஹராப்பான் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று மலாக்காவில் ஐந்து இடங்களில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்தார்.
முதற்கட்டமாக, தாமான் குருபோங் ஜெயா பகுதியில் உள்ள கடைத் தொகுதிகள் மற்றும் மலாய் வியாபாரிகளின் கடைகளுக்குச் சென்று நடைபயணப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதனைத் தொடர்ந்து, கம்போங் மாச்சாப் பாரு இரவு சந்தைக்குச் சென்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.
மேலும், ஆயர் மோலெக்கில் உள்ள வாருங் செகு ஜாலால் டான் சிக் இடா உணவகத்தில் நடைபெற்ற ஙோப்பி சந்தாய் நிகழ்ச்சியிலும், புக்கிட் பாருவில் உள்ள ஹாங் துவா ஜெயா நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தில் நடைபெற்ற ஜெலாஜா ஹராப்பான் மலாக்கா நிகழ்ச்சியிலும் பங்கேற்கும் வகையில் அவரது பயண அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.

இறுதியாக, அலோர் காஜாவில் உள்ள தாமான் மலாக்கா பெர்டானாவில் நடைபெற்ற பெஸ்தா மலாக்கா ரூமா கீத்தா நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.
மலாக்காவின் 28 சட்டமன்றத் தொகுதிகளில் 24 தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் போட்டியிடும் நிலையில், வரும் நவம்பர் 14ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தின் இறுதிக்கட்டத்தில் பிரதமரின் இந்த மக்கள் சந்திப்புகள் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முக்கிய நடவடிக்கையாக அமைந்துள்ளன.








