Nov 12, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா இந்திய வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் வலியுறுத்தல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா இந்திய வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் வலியுறுத்தல்

மலாக்கா மாநிலத்தில் உள்ள இந்திய வாக்காளர்கள், வரும் மாநில தேர்தலில் வாக்களிக்கும் முன்பு வேட்பாளர்களின் செயல்பாடுகளை ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ அ. சிவநேசன் வலியுறுத்தியுள்ளார்.

மலாக்காவில் இந்தியர்கள் 5.3 விழுக்காட்டினராக உள்ள நிலையில், அவர்களுக்காக ஒரு சட்டமன்றத் தொகுதியும், ஓர் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை அரசாங்கத்தில் எடுத்துரைப்பதுடன், மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதும் ஆட்சிக்குழு உறுப்பினரின் முக்கியப் பொறுப்பு என்றார்.

மலாக்கா ஜசெக. தலைவர் கூ போயெ தியோங் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் ஆகியோரின் அழைப்பின் பேரில் மலாக்காவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்த டத்தோ சிவநேசன், காடேக் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் ஜசெக.வை சேர்ந்த கே. ஜெகசீலனை ஆதரித்து தீவிர பிராச்சாரம் மேற்கொண்ட பின்னர் திசைகளுக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

காடேக் தொகுதியில் ஜெகசீலன் வெற்றிப் பெறுவது மிக முக்கியம் என்று வலியுறுத்தி அவர், இதன் மூலம் மலாக்காவில் இந்திய சமூகத்திற்கு வழங்கப்படும் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியை தற்காத்துக் கொள்ள முடியும் என்றார்.

அரசியல் சர்ச்சைகளை உருவாக்குவதற்குப் பதிலாக, மக்களுக்காகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை அரசியல் கட்சிகள் முன்வைக்க வேண்டும் என்றும், வாக்காளர்கள் உண்மையான தகவல்களை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும் என்றும் சிவநேசன் கேட்டுக் கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →