Nov 12, 2026
Thisaigal NewsYouTube

ஆயர் மோலெக் பசார் மாலாமில் மக்களைச் சந்தித்த டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா!

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆயர் மோலெக் பசார் மாலாமில் மக்களைச் சந்தித்த டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா!

மலாக்கா மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தை முன்னிட்டு, தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில், இன்று மாலை ஆயர் மோலெக் பசார் மாலாமிற்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.

'சந்தாய் பெத்தாங்' என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் துணைவியார் டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் மற்றும் ஆயர் மோலெக் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் முஹமட் ஹாகிமின் மொக்தார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அப்போது வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய தலைவர்கள், அவர்களின் கருத்துகளையும் குறைகளையும் கேட்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஃபாஹ்மி ஃபாட்ஸில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமையில் நிறுவனச் சீர்திருத்தங்கள், நாடாளுமன்றத்தின் சுதந்திரமான செயல்பாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் பிரதமரின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும், அரசாங்கத்தின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்குத் தடையாக இருக்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையே, மலாக்கா தேர்தல் தொடர்பான சமூக ஊடகத் தகவல்களைப் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், வாக்களிப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகள் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்களுக்கு தேர்தல் ஆணையமான எஸ்பிஆரை மட்டுமே நாட வேண்டும் என்றும் ஃபாஹ்மி அறிவுறுத்தினார்.

இதனிடைய கடந்த 12 நாட்கள் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் வாக்காளர்களின் ஆதரவு, நேர்மறையாக உள்ளது என்றும், வரும் 14 ஆம் தேதி சனிக்கிழமை வாக்காளர்கள் திரண்டு வந்து தமக்கு ஆதரவு நல்கி வாக்களிக்க வேண்டும் என்று ஆயர் மோலெக் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் முஹமட் ஹாகிமின் மொக்தார், தொகுதி வாக்காளர்களைக் கேட்டுக் கொண்டார்.

ஆயர் மோலேக் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் முஹமட் ஹாகிமின் மொக்தார், பாரிசான் நேஷனல் வேட்பாளர் டத்தோ முஹமட் ரிட்வான் மொஹமட் அலியிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
காடேக் தொகுதியில் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண கே. ஜெகசீலனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் – வாக்காளர்கள் நம்பிக்கை

காடேக் தொகுதியில் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண கே. ஜெகசீலனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் – வாக்காளர்கள் நம்பிக்கை

மலாக்கா தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு திரட்டிய பிரதமர் அன்வார் – ஐந்து இடங்களில் மக்கள் சந்திப்பு

மலாக்கா தேர்தல்: பக்காத்தான் ஹராப்பானுக்கு ஆதரவு திரட்டிய பிரதமர் அன்வார் – ஐந்து இடங்களில் மக்கள் சந்திப்பு

கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை – ராயர் குற்றச்சாட்டு

கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை – ராயர் குற்றச்சாட்டு

மலாக்கா இந்திய வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் வலியுறுத்தல்

மலாக்கா இந்திய வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் – பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் சிவநேசன் வலியுறுத்தல்

மலாக்கா தேர்தல்: 24 தொகுதிகளில் போட்டியிடும் பிஎச் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் அட்லி ஸஹாரி

மலாக்கா தேர்தல்: 24 தொகுதிகளில் போட்டியிடும் பிஎச் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரும் அட்லி ஸஹாரி

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு - சாஹிட் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு - சாஹிட் நம்பிக்கை