இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தேசிய அரசியலில் அனுபவம் பெற்றுள்ள டத்தோ அஸ்மான் அபிடின், மலாக்கா மாநிலத்தின் பாயா ரும்புட் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு தனது அனுபவத்தைச் சேவையாக வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிடும் அவர், அரசியல் என்பது பதவியையும் அதிகாரத்தையும் தேடுவதற்கான களமல்ல என்றும், மக்களுக்குத் திரும்பச் சேவையாற்றுவதற்கான வாய்ப்பு என்றும் குறிப்பிட்டார்.
பிரதமரின் அரசியல் செயலாளராகவும், தேசிய அளவிலான நிர்வாகப் பொறுப்புகளிலும் பெற்ற அனுபவத்தை, உள்ளூர் மக்களின் தேவைகளுக்கேற்ப பயன்படுத்த விரும்புவதாக டத்தோ அஸ்மான் தெரிவித்தார்.
மேலும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, பொதுவசதிகள், பொருளாதார வாய்ப்புகள், இளைஞர் மேம்பாடு, கல்வி மற்றும் மக்கள் நலன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புவதாகவும் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மக்களின் வாழ்க்கையில் காணப்படும் நடைமுறை மாற்றங்களே தமது மக்கள் சேவையின் வெற்றியை அளவிடும் முக்கிய அளவுகோலாக இருக்கும் என்றும் டத்தோ அஸ்மான் தெரிவித்தார்.








