மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இன்று இரவு 11.59 மணிக்குள் அனைத்து வகையான தேர்தல் பிரசாரங்களையும், சமூக ஊடகப் பிரசாரங்கள் உட்பட நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குப் பிறகு, புதிய தேர்தல் பிரசாரப் பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடக்கூடாது என அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஶ்ரீ ஃபாஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்துள்ளார்.
கடைசி நேரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறுவதைத் தவிர்க்க, வேட்பாளர்கள் தங்களது இறுதிக்கட்ட பிரசாரச் செய்திகளை முன்கூட்டியே வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும், மலாக்காவில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்பதால், வாக்காளர்கள் அதிகாலையிலேயே வாக்களிக்கச் செல்லுமாறும் அவர் அறிவுறுத்தினார்.
வாக்களிப்பதற்காக சொந்த ஊர்களுக்குத் திரும்பும் மக்கள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதுடன், போதிய ஓய்வு எடுத்துக் கொள்ளவும், வாகனங்களின் பராமரிப்பை உறுதிப்படுத்தவும், வேகக் கட்டுப்பாட்டை மீறாமல் பயணிக்கவும் அவர் கேட்டுக் கொண்டார்.








