Nov 14, 2026
Thisaigal NewsYouTube

முதற்கட்ட தேர்தல் முடிவுகள் இரவு 9.30 மணிக்குள் வெளியாகும் – தேர்தல் ஆணையத் தலைவர் தகவல்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
முதற்கட்ட தேர்தல் முடிவுகள் இரவு 9.30 மணிக்குள் வெளியாகும் – தேர்தல் ஆணையத் தலைவர் தகவல்

மலாக்கா மாநிலத் தேர்தலின் முதற்கட்ட தேர்தல் முடிவுகளானது இன்று இரவு 9.30 மணிக்குள் வெளியாகும் என்றும், அனைத்து தொகுதிகளுக்குமான முழுமையான முடிவுகள் நள்ளிரவு 12.30 மணிக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லான் ஹாருன் அறிவித்துள்ளார்.

எஸ்ஜேகே (சி) மாலிம் வாக்குச்சாவடியில் ஆய்வு மேற்கொண்ட போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கமான நடைமுறையின்படி, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குகள் எண்ணப்படும் என்றும், பின்னர் அந்தந்த தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு முடிவுகள் அனுப்பப்பட்டு, தொடர்ந்து ஆயர் குரோ பகுதியில் உள்ள விஸ்மா பெர்செகுதுவான் மையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என விளக்கமளித்தார்.

மேலும், அனைத்து நடைமுறைகளும் சுமுகமாக நடைபெறும் என நம்புவதாகக் குறிப்பிட்ட அவர், முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை பொதுமக்கள் பொறுமையுடன் காத்திருக்குமாறும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வத் தளங்களில் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையில், மாற்றுத்திறனாளிகளாகப் பதிவு செய்துள்ள 7,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இதுவரை தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் முன்னேற்றம் என்றும் ரம்லான் ஹாருன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
களைகட்டிய மலாக்கா மாநிலத் தேர்தல்: காலை 11.30 மணி நிலவரப்படி 34.28 விழுக்காடு வாக்குப்பதிவு

களைகட்டிய மலாக்கா மாநிலத் தேர்தல்: காலை 11.30 மணி நிலவரப்படி 34.28 விழுக்காடு வாக்குப்பதிவு

மலாக்கா மாநில தேர்தல்: முன்னாள் முதலமைச்சர் அப்துல் ரவூஃப் மனைவியுடன் வந்து வாக்களித்தார்

மலாக்கா மாநில தேர்தல்: முன்னாள் முதலமைச்சர் அப்துல் ரவூஃப் மனைவியுடன் வந்து வாக்களித்தார்

மலாக்கா மாநிலத் தேர்தல்:  28 சட்டமன்றத் தொகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது

மலாக்கா மாநிலத் தேர்தல்: 28 சட்டமன்றத் தொகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது

ஆயர் மோலெக் பாரிசான் நேஷனலின் பாரம்பரியத் தொகுதியாக இருந்தாலும், 52 விழுக்காடு இளம் வாக்காளர்கள் கவனம் பெறுகின்றனர் – ஏஎம்கே

ஆயர் மோலெக் பாரிசான் நேஷனலின் பாரம்பரியத் தொகுதியாக இருந்தாலும், 52 விழுக்காடு இளம் வாக்காளர்கள் கவனம் பெறுகின்றனர் – ஏஎம்கே

அமைச்சரவையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பதற்றம் இல்லை – அன்வார்

அமைச்சரவையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பதற்றம் இல்லை – அன்வார்

பாயா ரும்புட் மக்களுக்கு தனது அரசியல் அனுபவத்தைச் சேவையாக வழங்கத் தயார் – டத்தோ அஸ்மான் அபிடின்

பாயா ரும்புட் மக்களுக்கு தனது அரசியல் அனுபவத்தைச் சேவையாக வழங்கத் தயார் – டத்தோ அஸ்மான் அபிடின்