Nov 14, 2026
Thisaigal NewsYouTube

களைகட்டிய மலாக்கா மாநிலத் தேர்தல்: காலை 11.30 மணி நிலவரப்படி 34.28 விழுக்காடு வாக்குப்பதிவு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
களைகட்டிய மலாக்கா மாநிலத் தேர்தல்: காலை 11.30 மணி நிலவரப்படி 34.28 விழுக்காடு வாக்குப்பதிவு

மலாக்கா மாநிலத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்று வரும் 16-வது சட்டமன்றத் தேர்தலில் காலை 11.30 மணி நிலவரப்படி 34.28 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் நேரடி வாக்குப்பதிவு கண்காணிப்பு தகவலின்படி, இதுவரை 2 லட்சத்து 29 ஆயிரத்து 405 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

மொத்தம் உள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில், செர்காம் தொகுதியில் அதிகபட்சமாக 38.55 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், கெசிடாங் தொகுதியில் மிகக் குறைவாக 29.88 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் 28 தொகுதிகளைக் கைப்பற்ற 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 6 லட்சத்து 75 ஆயிரத்து 166 பொது வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் 70 விழுக்காடு வாக்குப்பதிவை எட்ட தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

அதேவேளையில் மலாக்காவின் மூன்று மாவட்டங்களிலும் இன்று காலை மேகமூட்டமான வானிலையும், பிற்பகலில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.

இதனால், வாக்காளர்கள் மதியத்திற்குள் வந்து வாக்களிக்குமாறு அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
முதற்கட்ட தேர்தல் முடிவுகள் இரவு 9.30 மணிக்குள் வெளியாகும் – தேர்தல் ஆணையத் தலைவர் தகவல்

முதற்கட்ட தேர்தல் முடிவுகள் இரவு 9.30 மணிக்குள் வெளியாகும் – தேர்தல் ஆணையத் தலைவர் தகவல்

மலாக்கா மாநில தேர்தல்: முன்னாள் முதலமைச்சர் அப்துல் ரவூஃப் மனைவியுடன் வந்து வாக்களித்தார்

மலாக்கா மாநில தேர்தல்: முன்னாள் முதலமைச்சர் அப்துல் ரவூஃப் மனைவியுடன் வந்து வாக்களித்தார்

மலாக்கா மாநிலத் தேர்தல்:  28 சட்டமன்றத் தொகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது

மலாக்கா மாநிலத் தேர்தல்: 28 சட்டமன்றத் தொகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது

ஆயர் மோலெக் பாரிசான் நேஷனலின் பாரம்பரியத் தொகுதியாக இருந்தாலும், 52 விழுக்காடு இளம் வாக்காளர்கள் கவனம் பெறுகின்றனர் – ஏஎம்கே

ஆயர் மோலெக் பாரிசான் நேஷனலின் பாரம்பரியத் தொகுதியாக இருந்தாலும், 52 விழுக்காடு இளம் வாக்காளர்கள் கவனம் பெறுகின்றனர் – ஏஎம்கே

அமைச்சரவையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பதற்றம் இல்லை – அன்வார்

அமைச்சரவையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பதற்றம் இல்லை – அன்வார்

பாயா ரும்புட் மக்களுக்கு தனது அரசியல் அனுபவத்தைச் சேவையாக வழங்கத் தயார் – டத்தோ அஸ்மான் அபிடின்

பாயா ரும்புட் மக்களுக்கு தனது அரசியல் அனுபவத்தைச் சேவையாக வழங்கத் தயார் – டத்தோ அஸ்மான் அபிடின்