Nov 14, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா தேர்தல் தொடர்பாக 32 விசாரணைக் கோப்புகள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா தேர்தல் தொடர்பாக 32 விசாரணைக் கோப்புகள் சட்டத்துறைத் தலைவரிடம் ஒப்படைப்பு

மலாக்கா மாநிலத் தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட 32 விசாரணைக் கோப்புகளை காவல்துறை சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் 14 நாட்களில் கொடிகள் கிழிக்கப்பட்டது, எரிக்கப்பட்டது மற்றும் சிலரின் உரைகளில் தேசநிந்தனை அம்சங்கள் இடம் பெற்றதாக எழுந்த புகார்கள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக மொத்தம் 42 காவல்துறை புகார்கள் பெறப்பட்டதாக தேசிய காவல்துறைத் தலைவர் டான் ஶ்ரீ முஹமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

மலாக்கா, ஆயர் குரோவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விசாரணைகள் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் சார்பின்றி தொழில்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், சர்ச்சைக்குரிய அரசியல் உரை தொடர்பான விசாரணையும் முடிக்கப்பட்டு சட்டத்துறைத் தலைவரின் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட நபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →
மலாக்கா சட்டமன்றத் தேர்தல்:  மாநில அரசை அமைப்பதாக பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவிப்பு

மலாக்கா சட்டமன்றத் தேர்தல்: மாநில அரசை அமைப்பதாக பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவிப்பு

மலாக்கா வெற்றிக்கு BN–PN கூட்டணியின் திட்டமிட்ட ஒத்துழைப்பே காரணம் – தக்கியுடின்

மலாக்கா வெற்றிக்கு BN–PN கூட்டணியின் திட்டமிட்ட ஒத்துழைப்பே காரணம் – தக்கியுடின்

மலாக்கா தேர்தலை நேரில் பார்வையிட்ட 10 ஆசிய நாடுகளின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

மலாக்கா தேர்தலை நேரில் பார்வையிட்ட 10 ஆசிய நாடுகளின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி – அடையாள அட்டையை மறந்து திரும்பிச் சென்ற பரபரப்பு

திருமணக் கோலத்தில் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி – அடையாள அட்டையை மறந்து திரும்பிச் சென்ற பரபரப்பு

போலி வாட்ஸ்அப் தகவலால் வாக்களிக்க முடியாமல் தவித்த பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்

போலி வாட்ஸ்அப் தகவலால் வாக்களிக்க முடியாமல் தவித்த பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்

மலாக்கா தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி 52.15 விழுக்காடு வாக்குப்பதிவு

மலாக்கா தேர்தல் – பிற்பகல் 2 மணி நிலவரப்படி 52.15 விழுக்காடு வாக்குப்பதிவு