Nov 14, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா சட்டமன்றத் தேர்தல்: மாநில அரசை அமைப்பதாக பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா சட்டமன்றத் தேர்தல்:  மாநில அரசை அமைப்பதாக பாரிசான் நேஷனல் – பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அறிவிப்பு

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் 28 தொகுதிகளில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மொத்தம் 24 தொகுதிகளைக் கைப்பற்றி மாநில அரசை அமைப்பதாக அறிவித்துள்ளன.

இதில் பாரிசான் நேஷனல் 21 தொகுதிகளிலும், பெரிக்காத்தான் நேஷனல் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

அதேவேளையில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆயர் குரோ, கோத்தா லக்சமணா, பண்டார் ஹிலிர் மற்றும் கெசிடாங் ஆகிய தொகுதிகளில் ஜசெக வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் மலாக்கா மாநில சட்டமன்றத்தில் பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மொத்தம் 24 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு தரப்பினரும் இணைந்து மாநில அரசை அமைப்பதாக அறிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →